[X] Close

ஆப்கான்-பாகிஸ்தான் ரசிகர்கள் இடையே கைகலப்பு, அடிதடி


  • kamadenu
  • Posted: 30 Jun, 2019 12:34 pm
  • அ+ அ-

லீட்ஸ் நகரில் நேற்று நடந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இரு நாட்டு ரசிகர்களும் கடுமையாக மோதிக்கொண்ட சம்பவம் வெளியாகியுள்ளது.

உலகக் கோப்பையின் முக்கியமான லீக் ஆட்டத்தில் நேற்று பாகிஸ்தான் அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. இரு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் ஏராளமானோர் போட்டி நடந்த ஹெடிங்லி அரங்கில் ஆட்டத்தைக் காண வந்திருந்தனர்.

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பவுண்டரி சிக்ஸர்கள் அடிக்கும்போதும், விக்கெட்டுகளை வீழ்த்தும் போதும், பாகிஸ்தான் ரசிகர்கள் உற்சாகத்தால் கோஷமி்ட்டனர்.

அதேபோல,ஆப்கானிஸ்தான் ரசிகர்களும் தங்கள் நாட்டு அணியினரை உற்சாகப்படுத்த கோஷமிட்டனர்.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் சேர்த்தது. 228 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. ஒரு கட்டத்தில் கடைசி 3 ஓவர்களுக்கு 18 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் நிலையில், பாகிஸ்தான் மிகவும் நிதானமாக ஆடிய கடைசி 2 பந்துகள் இருக்கும் நிலையில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

கலகலப்பில் ஈடுபட்ட ரசிகர்கள் 

ஆட்டம் 40 ஓவர்களுக்குப்பின் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் வகையில்தான் சென்றது. ஆனால், பந்துவீச்சாளர்கள் சொதப்பியதால், பாகிஸ்தான் அணி வீரர் இமாத் வாசிம், வகாப் ரியாஸ் ஆட்டத்தால் வெற்றி பெற்றது.  இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவாக, அந்நாட்டு ரசிகர்களும், ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவாக அந்நாட்டு ரசிகர்களும் கோஷமிடுவதில் திடீரென தகராறு ஏற்பட்டது. முதலில் இரு நாட்டு ரசிகர்களுக்கு இடையே வாக்குவாதமாக தொடங்கியநிலையில், அதன்பின் கைகலப்பில் முடிந்தது. ஆப்கான் ரசிகர்களும், பாகிஸ்தான் ரசிகர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

Fans-fighting.jpg 

அரங்கில் இரு நாட்டு ரசிகர்களும் பாட்டில்கள், நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களை வீசி சண்டையிட்டுக்கொண்டிருப்பதை அங்கு இருந்த பாதுகாவலர்கள் கவனித்தபோதும் அதைத் தடுக்க முன்வரவில்லை. இருநாட்டு ரசிகர்களுக்கும் இடையிலான சண்டை நீண்டநேரம் நீடித்தும் யாரும் தடுக்க முன்வரவில்லை. ஒரு கட்டத்தில் இரு நாட்டு ரசிகர்களும் அமைதியாகி அங்கிருந்து சென்றனர்.

சண்டையிட்டுக்கொண்ட இரு நாட்டு ரசிகர்கள் 

இந்த காட்சியை அரங்கில் இருந்த ஒரு பத்திரிகையாளர் இதை வீடியோவாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் " அரங்கில் மிகப்பெரிய சண்டை நடக்கிறது. பாட்டில்கள் பறக்கின்றன, ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்கிறார்கள். அனைத்தும் தூக்கிவீசப்படுகின்றன. இந்த சண்டையை தடுக்க பாதுகாவலர்கள் யாரும் இல்லையா. பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தானை வென்றதும் இருநாட்டு ரசிகர்களுக்கும் இடையே அடிதடி தொடங்கிவிட்டது. அசிங்கமாக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்..

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close