[X] Close

இங்கிலாந்து அணியில் முக்கிய வீரருக்கு காயம்: இந்தியாவுக்கு சாதகமான வாய்ப்பு


  • kamadenu
  • Posted: 30 Jun, 2019 11:00 am
  • அ+ அ-

எட்ஜ்பாஸ்டனில் இந்திய அணிக்கு எதிராக உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.

ஜோப்ரா ஆர்ச்சர் இல்லாத நிலையில் இந்திய அணிக்கு அது மிகப்பெரிய சாதகமாகவும், இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாகவும் இருக்கும்.

இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு செல்ல இன்று இந்தியாவுக்கு எதிராக நடக்கும் ஆட்டத்திலும், அடுத்ததாக நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்திலும் வெல்வது கட்டாயமாகும். இதில் ஒரு போட்டியில் தோற்றால்கூட இங்கிலாந்து அணி அரையிறுதிக்குள் செல்வது கடினம்.

கடந்த மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான போட்டியின் போது தசைப்பிடிப்பு காயத்தால் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேஸன் ராய் விலகினார். அவர் இல்லாமல் அடுத்த இரு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது.

இன்னும் ஜேஸன் ராய் முழுமையாக காயத்தில் இருந்து குணமடையவில்லை என்றபோதிலும் வேறு வழியில்லாமல் நேற்றுமுதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இன்றைய ஆட்டத்தில் அவரை வேறுவழியின்றி விளையாட வைக்க வேண்டிய நிர்பந்தத்தில் இங்கிலாந்து அணி இருக்கிறது.

jofra.jpg 

இந்த சூழலில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர்  ஜோப்ரா ஆர்ச்சருக்கும் காலில் தசைப்படிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த இரு நாட்களாக பயிற்சியில் ஈடுபடாமல் ஓய்வில் இருந்துவருகிறார். இதனால், இன்றைய ஆட்டத்தில் விளையாடுவாரா என்பது தெரியவில்லை.

இதுகுறித்து இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறுகையில் " ஜேஸன் ராயை நாளை இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட வைக்க முயற்சித்து வருகிறோம். அவரும் தயாராகி வருகிறார். அவர் உடற்தகுதி பெற்று விடுவார் என்று நம்புகிறோம்

ஆர்ச்சரைப் பொருத்தவரை அவர் இரு நாட்களாக பயிற்சியில் ஈடுபடவில்லை. நாளை எவ்வாறு களமிறங்குவார் என்பதும் தெரியவில்லை. ஜோப்ரா ஆர்ச்சர் உடல்தகுதியுடன் நாளை விளையாடுவாரா என்பதை இப்போது கூற இயலாது. கடைசி நேரத்தில்தான் முடிவு செய்யப்படும்.


இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் எங்களுக்கு முக்கியமானது. இன்னும் மீதமிருக்கும் இரு ஆட்டங்களை வென்றுவிட்டால், அரையிறுதிக்குள் சென்றுவிடுவோம் என நம்புகிறோம். ஒரு ஆட்டத்தில் வென்றால்கூட வாய்ப்பு இருக்கிறது " எனத் தெரிவித்தார்.

ஆதலால், இன்றைய இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் பெரும்பாலும் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close