[X] Close

அதிகமான விக்கெட்டுகள் யார்?, அதிகமான ரன்கள் சேர்த்த வீரர் யார்?: இந்தியா- இங்கிலாந்து போட்டி குறித்த முழு விவரம்


  • kamadenu
  • Posted: 29 Jun, 2019 17:34 pm
  • அ+ அ-

உலகக் கோப்பைப் போட்டியில் நாளை மிக முக்கியமான லீக் ஆட்டம் நடக்கிறது. அரையிறுதிச் சுற்றுக்குள் இங்கிலாந்து அணி நுழைவதற்கு நாளை ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும்.

இதுவரை இந்திய அணியை 27 ஆண்டுகளாக உலகக் கோப்பைப் போட்டியில் வெல்ல  முடியாமல் இருக்கும் இங்கிலாந்து அணி  நாளை வெல்ல வேண்டிய நிலையில் இருக்கிறது. இரு அணிகள் குறித்த புள்ளிவிவரங்கள் ஒரு பார்வை:

இதுவரை இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 99 ஒருநாள் ஆட்டங்கள் நடந்துள்ளன. அதில் இங்கிலாந்து அணி 53 ஆட்டங்களிலும், இந்தியஅணி 41 ஆட்டங்களிலும் வென்றுள்ளது.  2 போட்டிகள் சமனிலும், ஒரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை.

உலகக் கோப்பைப் போட்டியில் இதுவரை இரு அணிகளும் 7 முறை மோதியுள்ள இதில் இங்கிலாந்து அணி (1975, 1987, 1992) 3 முறை வென்றுள்ளது. இந்திய அணி(1983, 1999, 2003) 3 முறை வாகை சூடியுள்ளது. ஒரு போட்டி 2011ம் ஆண்டு உலகக்கோப்பை ஆட்டம் சமனில் முடிந்தது.

2008-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 விக்கெட் இழப்புக்கு எதிராக 387 ரன்கள் சேர்த்ததே அதிகபட்ச ஸ்கோராகும்.

bumrahjpg.jpg 

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி தரப்பில் யுவராஜ் சிங் அதிகபட்சமாக 1,523 ரன்கள் குவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக 2011-ம் ஆண்டு இங்கிலாந்து வீரர் ஆன்ட்ரூ ஸ்டிராஸ் 158 ரன்கள் சேர்த்ததே அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகும்.

இரு அணிகளின் வீரர்கள் சேர்ந்து இதுவரை 43 சதங்கள் அடித்துள்ளனர். இதில் 4 சதங்கள் யுவராஜ் சிங் அடித்து அதிகபட்ச சதத்தை பதிவு செய்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் திராவிட், சுரேஷ் ரெய்னா அதிகப்டசமாக 11 அரைசதங்கள் அடித்துள்ளனர்.

இரு அணிகளில் அதிகபட்சமாக இந்திய அணி வீரர் மகேந்திரசிங் தோனி 33 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆன்டர்ஸன் 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சிறப்பான பந்துவீச்சாக, கடந்த 2003-ம்ஆண்டில் இந்திய வீரர் ஆஷிஸ் நெஹ்ரா 23 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இரு அணிகளுக்கு இடையே 12 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன.

இருமுறை ஹர்பஜன் சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

 இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திரசிங் தோனி அதிகபட்சமாக 55 டிஸ்மிஸல்களைச் செய்து முதலிடத்தில் இருக்கிறார். இதில் 2007-ம் ஆண்டு நடந்த ஆட்டத்தில் தோனி ஒரே ஆட்டத்தில் 6 டிஸ்மிஸல்களைச் செய்துள்ளார்.

அதிகமான கேட்சுகளை பிடித்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து வீரர் பால் காலிங்வுட் 24 கேட்சுகளைப் பிடித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close