[X] Close

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்


  • kamadenu
  • Posted: 29 Jun, 2019 08:13 am
  • அ+ அ-

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்டிங்லி மைதானத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி 3 தோல்வி, ஒரு ஆட்டம் ரத்து என லீக் சுற்றுடன் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டிருந் தது. ஆனால் தனது கடைசி இரு ஆட்டங் களில் தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து அணி களை வீழ்த்தியதன் மூலம் அரை இறுதிக்கு முன் னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்கிறது பாகிஸ்தான் அணி.

தொடரை நடத்தும் இங்கிலாந்து அணி யானது தனது கடைசி இரு ஆட்டங்களில் தோல்வியடைந்ததன் காரணமாகவே 1992-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் அணியின் அரை இறுதி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இன்றைய ஆட்டத்திலும், வங்கதேச அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள முடியும்.

தோல்வியை சந்திக்காமல் வலம் வந்த நியூஸிலாந்து அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. அந்த ஆட்டத்தில் சதம் அடித்த பாபர் அஸாமிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். இதேபோல் ஹாரிஸ் சோஹைலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான பேட்டிங் திறனை வெளிப்படுத்தி வருகிறார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 59 பந்துகளில் 89 ரன்கள் விளாசிய ஹாரிஸ் சோஹைல், நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 68 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு உதவியிருந்தார். பந்து வீச்சில் ஷாஹீன் ஷா அப்ரீடி விக்கெட்கள் கைப்பற்ற தொடங்கியுள்ளது அணிக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஷாஹீன் ஷா அப்ரீடி 3 விக்கெட்கள் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தார்.

தற்போது கவலை என்னவென்றால் தென்னாப்பிரிக்காவையும், தோல்விகளை சந்திக்காமல் இருந்த நியூஸிலாந்தையும் வீழ்த்திய பின்னர் பாகிஸ்தான் அணியில் மனநிறைவு உணர்வு ஊடுருவக்கூடும், ஆனால் இதற்கு இடம் அளிக்காத வகையில் மீண்டும் ஒரு சிறந்த திறனை வெளிப்படுத்துவதில் பாகிஸ்தான் அணி கவனம் செலுத்தக்கூடும்.

ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய 7 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது. எனினும் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணியின் பந்து வீச்சு சற்று தாக்கத்தை ஏற்படுத்தியது.

அந்த ஆட்டத்தில் குறைந்த இலக்கை துரத்திய போதிலும் அனுபவமின்மையால் வெற்றியை தாரைவார்த்திருந்தது ஆப்கானிஸ்தான் அணி. தோற்பதற்கு இனி ஒன்றுமில்லை என்ற நிலையில் இருக்கும் அந்த அணி கடந்த ஆட்டத்தைவிட சிறப்பாக செயல்படுவதில் முனைப்பு காட்டக்கூடும்.

பாகிஸ்தான்: சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), பஹர் ஸமான், இமாம்-உல்-ஹக், பாபர் அஸாம், ஹாரிஸ் சோகைல், ஆசிப் அலி, ஷோயிப் மாலிக், மொகமது ஹபீஸ், இமாத் வாசிம், ஷதப் கான், வகாப் ரியாஸ், மொகமது அமிர், ஹசன் அலி, ஷாஹீன் ஷா அப்ரிடி, மொகமது ஹஸ்நயின்.

ஆப்கானிஸ்தான்: குல்பாதின் நயிப் (கேப்டன்),  இம்ராம் அலி கில், நூர் அலி ஸத்ரன், ஹஸ்ரத்துல்லா ஷசாய், ரஹ்மத் ஷா, அஸ்கர் ஆப்கான், ஹஸ்மதுல்லா ஷாகிதி, நஜிபுல்லா ஸத்ரன், சமியூல்லா ஷின்வாரி, மொகமது நபி, ரஷித் கான், தவ்லத் ஸத்ரன், அப்தாப் ஆலம், ஹமித் ஹசன், முஜீப் உர் ரஹ்மான்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close