[X] Close

ஆதிக்கத்தை தொடருமா ஆஸ்திரேலியா? நியூஸிலாந்துடன் இன்று பலப்பரீட்சை


  • kamadenu
  • Posted: 29 Jun, 2019 08:08 am
  • அ+ அ-

உலகக் கோப்பை கிரிக்கெட் தொட ரில் இன்று மாலை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடை பெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பிய னான ஆஸ்திரேலிய அணி, நியூஸிலாந்துடன் மோதுகிறது.

இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் தோல்வியை சந்தித்த ஆரோன் பின்ச் தலை மையிலான ஆஸ்திரேலிய அணி 7 ஆட்டத்தில், 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் குவித்து முதல் அணியாக அரை இறுதிக்குள் கால் பதித்தது. வெற்றி வேட்கையுடன் உள்ள அந்த அணியிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.

அதேவேளையில் கேன் வில்லி யம்சன் தலைமையிலான நியூஸி லாந்து அணியானது தனது கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 6 விக்கெட்கள் வித்தியா சத்தில் தோல்வியடைந்த நிலையில் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது. 7 ஆட்டத்தில், 5 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு ஆட்டம் ரத்து என 11 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள நியூஸிலாந்து அணியானது அரை இறுதிக்கு முன்னேற வேண்டுமானால் எஞ் சிய இரு ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.

உலகக் கோப்பை தொடர்களில் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் கடந்த 1999-ம் ஆண்டு சோபியா கார்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் மட்டுமே நியூஸிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை வென் றிருந்தது. மற்ற 6 ஆட்டங்களிலும் தோல்வி கண்டது. கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் சந்தித்தன. இதில் ஆஸ்திரேலியா வாகை சூடியிருந்தது.

வரலாறு மட்டும் அல்ல தற் போதைய வீரர்களின் பார்மையும் கருத்தில் கொண்டால் ஆஸ்தி ரேலிய அணிக்கே ஆட்டத்தின் முடிவு சாதகமாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. ஆஸ்திரே லிய அணி தனது கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.

ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் ஜோடி சிறந்த பார்மில் உள் ளது. இந்தத் தொடரில் அதிக ரன் கள் குவித்துள்ளவர்களின் பட்டிய லில் 500 ரன்களுடன் வார்னர் முதலிடத்திலும், 496 ரன்களுடன் ஆரோன் பின்ச் 2-வது இடத்திலும் உள்ளனர். இவர்கள் இருவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.

பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க் அதீத பார்மில் உள்ளார். சீரான வேகம், ஸ்விங், பவுன்ஸ் ஆகிய வற்றால் பேட்ஸ்மேன்களை கடும் சோதனைகளுக்கு உள்ளாக்கி வரும் ஸ்டார்க், இந்தத் தொடரில் 19 விக்கெட்களை வேட்டையாடி உள்ளார். இன்றைய ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியின் பேட்டிங் வரிசைக்கு ஸ்டார்க் கடும் சவால் அளிக்கக்கூடும்.

இதேபோல் மற்றொரு இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜேசன் பெஹ்ரன்டார்ப்பும் அணிக்கு பலம் சேர்த்து வரு கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 விக்கெட்கள் கைப்பற் றிய அவர், மீண்டும் ஒரு முறை உயர்மட்ட செயல்திறனை வெளிப் படுத்துவதில் முனைப்பு காட்டக் கூடும். நியூஸிலாந்து அணியானது கேப்டன் கேன் வில்லியம்சனின் பேட்டிங்கையே பெரிதும் சார்ந்துள்ளது.

5 இன்னிங்ஸ்களில் 414 ரன்கள் குவித்துள்ள அவர், மீண்டும் ஒருமுறை அணியை முன்னின்று நடத்துவதில் தீவிரம் காட்டக்கூடும். தொடக்க வீரர்களான மார்ட்டின் கப்தில், காலின் மன்றோ ஜோடி நிலையான தொடக்கம் கொடுக் காதது பெரிய பலவீனமாக உள் ளது. இதேபோல் நடுவரிசையில் டாம் லேதம், ராஸ் டெய்லரிடம் இருந்தும் பெரிய அளவிலான இன்னிங்ஸ் வெளிப்படவில்லை.

அநேகமாக இன்றைய ஆட்டத் தில் தொடக்க ஜோடி மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த வகை யில் காலின் மன்றோ தனது இடத்தை இழக்க நேரிடக்கூடும். ஆல் ரவுண்டர்களான காலின் டி கிராண்ட்ஹோம், ஜேம்ஸ் நீஷாம் ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதி ரான ஆட்டத்தில் சிறப்பாக விளை யாடியிருந்தனர். இவர்கள் மீண் டும் ஒரு முறையை மட்டையை சுழற்றக்கூடும்.

அணிகள் விவரம்

ஆஸ்திரேலியா: ஆரோன் பின்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ் வெல், மார்கஸ் ஸ்டாயினிஸ், அலெக்ஸ் காரே, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட் சன், நேதன் கவுல்டர் நைல், ஜேசன் பெஹ்ரன்டார்ப், நேதன் லயன், ஆடம் ஸம்பா.

நியூஸிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), மார்ட்டின் கப்தில், ஹென்றி நிக்கோல்ஸ், ராஸ் டெய் லர், காலின் மன்றோ, டாம் லேதம், டாம் பிளண்டெல், ஜிம்மி நீஷாம், காலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, டிரென்ட் போல்ட், லூக்கி பெர்குசன், மேட் ஹென்றி.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close