[X] Close

கோலியின் பதிவுக்கு பதிலளித்த மான்செஸ்டர் கால்பந்து அணி


  • kamadenu
  • Posted: 28 Jun, 2019 15:59 pm
  • அ+ அ-

மான்செஸ்டர் இன்று நீல நிறமாக மாறியுள்ளது என்ற இந்திய அணி கேப்டன் கோலியின் பதிவுக்கு மான்செஸ்டர் கால்பந்து அணி கிண்டலாக பதிலளித்துள்ளது.

முகமது ஷமி, பும்ரா ஆகியோரின் துல்லியமான, நெருக்கடி தரும் பந்துவீச்சால் மான்செஸ்டரில் நேற்று நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை 125 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி.

இந்த ஆட்டத்தில் விக்கெட்கள் சரிந்த போது கோலி, ராகுல், தோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர்.

இந்திய அணி வெற்றி பெற்றத்தைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்திய அணியை காண இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு வந்திருந்தனர்.

இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் கோலி  ரசிகர்களுடன் இருக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டு ட்விட்டர் பக்கத்தில்,” கால்பந்தை பற்றி தெரியவில்லை. ஆனால் இன்று மான்செஸ்டர் நீலமாக மாறியுள்ளது.  சிறந்த வெற்றி” என்று தெரிவித்தார்.

இதற்கு மான்செஸ்டர் கால்பந்து அணி கோலியின் பதிவை குறிப்பிட்டு பொறாமைப்படுவதை குறிக்கும் வகையிலான ஸ்மைலியை குறிப்பிட்டு பதிவிட்டது.

இப்பதிவுக்கு கீழே கால்பந்து ரசிகர்கள் பலர் நாங்கள் இருக்கிறோம் என்று பதிவிட்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

ட்வீட்  

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close