[X] Close

தோனி - ஹர்திக் பாண்டியா ஆட்டத்தை மாற்றினர்: டெண்டுல்கர் பாராட்டு


  • kamadenu
  • Posted: 28 Jun, 2019 12:43 pm
  • அ+ அ-

மேற்கிந்திய தீவுகளுடனான ஆட்டத்தில் தோனி - ஹர்த்திக் பாண்டியா கூட்டணி ஆட்டத்தை மாற்றியதாக சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி, பும்ரா ஆகியோரின் துல்லியமான, நெருக்கடி தரும் பந்துவீச்சால் மான்செஸ்டரில் நேற்று நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை 125 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி.

இந்த ஆட்டத்தில் விக்கெட்கள் சரிந்த போது கோலி, ராகுல், தோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.

ஆப்கானிஸ்தான் ஆட்டத்தில் தோனி ஆட்டம் சிறப்பானதாக இல்லை என்று  விமர்சித்த சச்சின் டெண்டுலகர் மேற்கு இந்திய தீவுகளுடனான ஆட்டத்தில் தோனி சிறப்பாக இருந்ததாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சச்சின் கூறும்போது, “ மேற்கு இந்திய தீவுகள் அணியுடனான ஆட்டத்தில் தோனி - ஹர்திக் பாண்டியா இவர்களுடைய கூட்டணி ஆட்டத்தை மாற்றும் வகையில் இருந்தது. அவர்களுடைய கூட்டணி இல்லை என்றால் நாம் 260 இலக்கை தாண்டியிருக்க மாட்டோம்.

குறிப்பாக கடைசி ஓவரில் தோனி அடித்த 16 ரன்களை மறக்க வேண்டாம். அவர் வலுவாக ஆட்டத்தை முடித்தார்” என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close