[X] Close

'இந்தியாவிடம் இனிமேல் கெஞ்சமாட்டோம்': பாக். வாரிய தலைவர் இஷான் மானி ஆவேசம்


  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 11:33 am
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

எங்களுடன் விளையாட வாருங்கள் என்று இந்தியாவிடம் இனிமேல் கெஞ்சிமாட்டோம், அதேசமயம், இரு நாடுகளுக்கு இடையிலான தொடரை நடத்தவும் வலியுறுத்துவோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் இஷான் மானி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

உலககக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும நாளை மறுநாள் மான்செஸ்டரில் மோதுகின்றன. இரு அணிகளும் உலகக் கோப்பைப் போட்டியில் 7-வது முறையாக மோதுகின்றன. ஆனால் ஒருமுறைகூட இந்திய அணியை பாகிஸ்தானால் வெல்ல முடியவில்லை.

கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப்பின் இரு நாடுகளுக்கு இடையிலா நட்புறவுகெட்டு கிரிக்கெட் விளையாடுவது குறைந்தது. கடைசியாக 2012-13-ம் ஆண்டு இரு நாடுகுளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடந்தது. அதன்பின் நடக்கவில்லை.

அதன்பின் 6 போட்டிகள் நடத்த இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்பந்தம் செய்தாலும்  இந்திய அரசு அனுமதி அளிக்காததால், இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடத்தப்படாமல் இருந்து வருகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் இஷான் மானி, லாகூர் மைதானத்தில் நேற்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எங்களுடன் வந்து கிரிக்கெட் விளையாடுங்கள் என்று இந்தியாவை இனிமேல் கெஞ்சமாட்டோம். வேறு எந்த நாட்டு அணியையும் வலிந்துபோல் அழைக்கவும மாட்டோம். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான இருநாட்டு கிரிக்கெட் தொடர் மிகவும் கண்ணியமாக, மதிப்புடன் நடத்தப்பட வேண்டும், தொடங்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்குச் சென்று ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டிக்குப் பின் இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்மலரும் என்று நம்புகிறேன்.

பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் நடத்த முடிவு செய்துள்ளோம். முதல்கட்டமாக செப்டம்பர் மாதம் இலங்கை அணி எங்கள் நாட்டுக்கு வருகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒருபகுதியாக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்பின் எங்கள் அணி அக்டோபர், நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா பயணம் செய்து, ஒருநாள் தொடர், பகலிரவு டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

அதன்பின் மீண்டும் இலங்கை அணி டிசம்பர் மாதம் பாகிஸ்தான் வந்து ஒருநாள் தொடர், டி20 தொடரில் விளையாடுகிறது. வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் விளையாடக் கோரி ஐசிசியிடம் வலியுறுத்துவோம். தனிப்பட்ட உறவுகள் வேறு, கிரிக்கெட் உறவுகள் வேறு என்று எடுத்துரைப்போம். பாகிஸ்தானில் இன்று ஏராளமான மாற்றங்கள் வந்துவிட்டன. பாதுகாப்பு சூழல்கள் முன்னேற்றமடைந்து நவீனப்படுத்தப்பட்டுவிட்டது

இவ்வாறு இஷான் மானி தெரிவித்தார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close