[X] Close

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை மேற்கிந்தியத் தீவுகளுடன் தொடங்குகிறது இந்தியா: ஆகஸ்ட் 22-ல் ஆன்டிகுவாவில் முதல் டெஸ்ட்


22

  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 08:31 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தொடங்குகிறது இந்திய அணி.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் அடுத்த இருவருடங்கள் நடைபெற உள்ளது.

இதில் டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள 12 நாடுகளில் தரவரிசையில் 9 இடங்களில் உள்ள அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும் 6 அணிகளுடன் நடைபெறும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும். இந்த 6 தொடர்களில் 3 தொடர் சொந்த மைதானத்திலும், 3தொடர் எதிரணியின் மைதானத்திலும் நடைபெறும்.

ஒரு தொடரில் குறைந்தபட்சம் 2 ஆட்டங்களும், அதிகபட்சமாக 5 ஆட்டங்களும் இடம் பெறலாம். இதில் அதிக புள்ளிகளை பெறும் இரு அணிகள் 2021-ம்ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதும். இந்தஆட்டத்தில் வெற்றி பெறும்அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை வழங்கப்படும்.

இந்நிலையில் இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக  தொடங்குகிறது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 22-ம்தேதி ஆன்டிகுவாவிலும், 2-வது டெஸ்ட் போட்டி 30-ம்தேதி ஜமைக்காவிலும் தொடங்குகிறது.

முன்னதாக மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் 3 டி 20 ஆட்டம் மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரிலும் இந்திய அணி விளையாடுகிறது. முதல் இரு டி 20 ஆட்டங்கள் ஆகஸ்ட் 3 மற்றும் 4-ம் தேதிகளில் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள புரோவார்டு கவுன்டி மைதானத்தில் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து கடைசி டி 20 ஆட்டம் 6-ம் தேதி கயானாவில் நடத்தப்படுகிறது. 

ஒருநாள் போட்டி

இதைத் தொடர்ந்து முதல் ஒருநாள் போட்டி 8-ம் தேதி கயானாவிலும், 2-வது ஒருநாள் போட்டியும் (11-ம் தேதி), 3-வது ஒருநாள் போட்டியும் (14-ம் தேதி) டிரினிடாட்டிலும் நடைபெறுகிறது. இந்திய அணியின் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணமானது உலகக் கோப்பை தொடர் முடிவடைந்த உடனே தொடங்குவதாக இருந்தது. ஆனால் பிசிசிஐ-யின் கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட் முதல் வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close