[X] Close

ஷிகர் தவணின் கவிமயம்


  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 08:31 am
  • அ+ அ-

கட்டை விரல் பகுதியில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு காரணமாக நியூஸிலாந்து (13-ம் தேதி), பாகிஸ்தான் (16-ம் தேதி), ஆப்கானிஸ்தான் (22-ம் தேதி) ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் ஷிகர் தவண் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்துள்ள ஷிகர் தவண், பிசிசிஐ-யின் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.

இந்நிலையில் ஷிகர் தவண் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னைத் தானே ஊக்கப்படுத்திக் கொள்ளும் வகையில் உருது கவிஞர் ரஹ்த் இந்தோரியின் கவிதை வரிகளை பதிவிட்டுள்ளார். அதில், “சில சமயங்களில் நாங்கள் மலர்களின் நறுமணத்தை போன்று இருக்கிறோம், சில சமயங்களில் நாங்கள் மலையில் இருந்து வெளியேறும் புகையாய் இருக்கிறோம்.

எங்கள் விமானத்தின் இறக்கைகளை எப்படி ஒரு கத்தரிக்கோலால் வெட்ட முடியும். நாங்கள் இறகுகளால் பறக்கவில்லை, தைரியத்தால்” என தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close