[X] Close

ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா பாகிஸ்தான்?- டான்டன் நகரில் இன்று மோதல்


  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 09:56 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள் ளன. டான்டன் நகரில் இந்த ஆட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது.

பாகிஸ்தான் இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியைப் பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் மழையால் ரத்தானது. இந்நிலையில் 3 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது அந்த அணி. இத னால் ஆஸ்திரேலியாவுடனான இந்த ஆட்டம் பாகிஸ்தானுக்கு மிகவும் முக்கிய மான ஆட்டமாகக் கருதப்படு கிறது.

எனவே பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பகர் ஸமான், இமாம் உல் ஹக், பாபர் ஆசம், ஷோயிப் மாலிக், கேப்டன் சர்பிராஸ் ஆகியோர் இந்த ஆட்டத்தில் அதிரடியை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.

அதேபோல் பவுலிங்கில் ஆமிர், வஹாப் ரியாஸ், அப்ரிடி, ஹசன் அலி ஆகியோர் எதிரணி வீரர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கக்கூடும்.

அதே நேரத்தில் பாகிஸ்தானை விட பலமான அணியாக ஆஸ்திரேலியா உள்ளது. இதுவரை ஆஸ்திரேலியா 3 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றியும், ஒரு தோல்வியும் பெற்று 4 புள்ளிகளை வைத்துள்ளது.

இந்தியாவுடனான கடைசி ஆட்டத்தில் தோல்வி கண்டபோதும் வெற்றி இலக்குக்கு அருகே ஆஸ்திரேலிய வீரர்கள் வந்தனர்.

கேப்டன் பின்ச், வார்னர், கவாஜா, ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், கேரே ஆகியோர் அபாரமாக விளையாடி வருகின்றனர். அவர்களிடமிருந்து மேலும் ஒரு அபார இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.

ஆனால் தொடக்க ஆட்டக்காரர் வார்னர், இந்தியாவுடனான ஆட்டத்தில் அதிக பந்துகளை வீணடித்தார். எனவே இன்றைய ஆட்டத்தில் அவரிடமிருந்து அதிரடியான ஆட்டம் வெளிப்படக் கூடும் என்று தெரிகிறது. பவுலிங்கில் ஸ்டார்க், கவுல்ட்டர் நைல், ஸம்பா, கம்மின்ஸ் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

இந்த ஆட்டம் ஆஸ்திரேலியாவுக்கும் முக்கியமான ஆட்டமாகக் கருதப்படு கிறது.

அணிகள் விவரம்

ஆஸ்திரேலியா

ஆரோன் பின்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரே, கேன் ரிச்சர்ட்சன், பேட் கம்மின்ஸ், நாதன் கவுல்ட்டர் நைல், மிட்செல் ஸ்டார்க், ஜேசன் பெஹரன்டார்ப், ஆடம் ஸம்பா, நாதன் லயன்.

பாகிஸ்தான்

பகர் ஸமான், இமாம் உல் ஹக், பாபர் ஆசம், ஆசிப் அலி, ஷோயிப் மாலிக், முகமது ஹபீஸ், ஹரிஸ் சோஹைல், ஷதாப் கான், இமாத் வாசிம், சர்பிராஸ் அகமது (கேப்டன்), ஷாஹீன் அப்ரிடி, ஹசன் அலி, முகமது ஹஸ்னைன், வஹாப் ரியாஸ்,

மொகமது ஆமிர்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close