[X] Close

இலங்கையுடன் வங்கதேசம் இன்று பலப்பரீட்சை


  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 07:54 am
  • அ+ அ-

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று இலங்கை, வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

பிரிஸ்டல் நகரிலுள்ள கவுன்டி மைதானத்தில் இந்த ஆட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதுவரை இலங்கை 3 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி, ஒரு போட்டியில் தோல்வி கண்டுள்ளது. மற்றொரு போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. தற்போது அந்த அணி 3 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. எனவே இந்த ஆட்டம் இலங்கைக்கு மிக முக்கியமான ஆட்டமாக அமைந்துள்ளது.

நியூஸிலாந்துடன் தோல்வி கண்ட இலங்கை, ஆப்கானிஸ்தானை வென்றது. ஆனால் பாகிஸ்தானுடனான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. எனவே இந்த ஆட்டத்தில் வெல்வதற்காக இலங்கை வீரர்கள் முழு மூச்சுடன் போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நுவான் பிரதீப் காயம்கேப்டன் திமுத் கருணாரத்னே, மாத்யூஸ், குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, திசரா பெரேரா, திரிமன்னே ஆகியோர் பேட்டிங்கிலும், மலிங்கா, இசுரு உதானா, ஜீவன் மெண்டிஸ், சுரங்கா லக்மல், தனஞ்செயா டி சில்வா உள்ளிட்டோர் பலம் சேர்க்கின்றனர். இந்தப் போட்டியில் காயம் காரணமாகமுக்கிய வீரரான நுவான் பிரதீப் இடம்பெறமாட்டார். இது இலங்கைக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

அதே நேரத்தில் வங்கதேச அணி தான் பங்கேற்ற 3 போட்டிகளில் 2-ல் தோல்வியும், ஒரு போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் களமிறங்குகிறது.

பேட்டிங்கில் சவும்யா சர்க்கார், தமிம் இக்பால், ஷகிப் அல் ஹசன், மஷ்ராபே மோர்டாசா, லிட்டன் தாஸ் ஆகியோர் அணிக்கு பலம் சேர்க்கின்றனர். பவுலிங்கில் ஷகிப் அல் ஹசன், முஷ்டாபிசுர் ரஹ்மான், மெஹதி ஹசன், முகமது சைபுதீன், மஷ்ராபே மோர்டா, மோசடெக் ஹொசைன் ஆகியோர் எதிரணியை அச்சுறுத்துவர்.

அணி விவரம்:

வங்கதேசம்: மஷ்ராபே மோர்டாசா (கேப்டன்), அபு ஜயேத், லிட்டன் தாஸ், மஹ்மத்துல்லா, மெஹதி ஹசன், முகமது மிதுன், முகமது சைபுதீன், மோசடெக் ஹொசைன், முஷ்பிகுர் ரஹிம், முஷ்டாபிசுர் ரஹ்மான், ரூபல் ஹொசைன், சபிர் ரஹ்மான், ஷகிப் அல் ஹசன், சவும்யா சர்க்கார், தமிம் இக்பால்.

இலங்கை: திமுத் கருணாரத்னே (கேப்டன்), தனஞ்செய டி சில்வா, நுவான் பிரதீப், அவிஷ்க பெர்னாண்டோ, சுரங்கா லக்மல், மலிங்கா, ஏஞ்சலோ மாத்யூஸ், குசல் மெண்டிஸ், ஜீவன் மெண்டிஸ், குசல் பெரேரா, திசரா பெரேரா, மிலிந்தா சிறிவர்த்தனா, லஹிரு திரிமன்னே, இசுரு உதானா, ஜெப்ரி வான்டர்சே.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close