[X] Close

நீதான் ஓபனிங் என்றார் கங்குலி ஆனால் மறுநாள் காலையில்.. : யுவராஜ் சிங் ருசிகரம்


  • kamadenu
  • Posted: 10 Jun, 2019 20:53 pm
  • அ+ அ-

யுவராஜ் சிங் இந்திய ரசிகர்களின் இதயத்தை வென்ற 2011 உலகக்கோப்பை நாயகன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார். டெஸ்ட் போட்டியில் குறைந்தது 40 ரன்களாவது சராசரி வைக்க வேண்டுமென்று நினைத்ததாகவும், ஆனால் டெஸ்ட் தனக்கு கைகூடவில்லை என்பது வருத்தமே என்றும் தெரிவித்துள்ளார்.

 

ஓய்வுக்குப் பிறகு அவர் அளித்த நேர்காணலில் ருசிகர சம்பவம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டார்; அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாகக் களமிறங்குவதற்கு முன்பாக இரவு நேரம் முழுதும் பதற்றத்தில் இருக்கும் ஒரு செய்தியை கங்குலி அறிவித்தார் என்றார். கென்யாவில் நடைபெற்ற சாம்பியன்ஸ்டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத்தான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார் யுவராஜ், அந்தப் போட்டியில் 84 ரன்களை எடுத்து அசத்தினார் யுவராஜ். மேலும் பிரமாதமாகப் பந்து வீசியதோடு ஒரு பிரமிப்பூட்டும் கேட்சையும் எடுத்து கிரிக்கெட் உலகை திரும்பிப் பார்க்கவைத்தார்.

 

“போட்டிக்கு முதல் நாள் இரவு, கேப்டன் கங்குலி என்னிடம் வந்து நீதான் ஒப்பனிங் என்றார். ஆஸி.அணியில் பிரெட் லீ, ஜேசன் கில்லஸ்பி, கிளென் மெக்ரா, அந்த இரவு எனக்கு ஏகப்பட்ட பதற்றம் இருந்தது நினைவிருக்கிறது.

 

காலையில் எழுந்து நான் தொடக்க வீரராககத் தயாராக இருந்தேன். அப்போது சவுரவ் என்னிடம் வந்து, ‘நோ நோ  நான் சும்மா ஜோக் அடித்தேன்’ என்றார். அப்போது அவரிடம் விளையாட்டாகக் கூறினேன்  ‘இதை ஒருநாள் உங்களுக்குத் திருப்பி அளிப்பேன்’ என்றேன்.

 

ஆனால் சவுரவுக்குத் திருப்பிக் கொடுத்தேன், 2 ஆண்டுகள் சென்ற பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி.  நானும் ஹர்பஜனும் ஒரு நியூஸ்பேப்பர் கட்டிங்கை வைத்து போலி செய்தியை அவரிடம் காட்டினோம் அதாவது கங்குலி தன் அணி வீரரையே விமர்சிக்கிறார் என்பது போல். அதை அவரிடம் காட்டினோம், அவர் உண்மையென நம்பி ‘இனி இந்த அணியை நான் கேப்டன்சி செய்யப்போவதில்லை’ என்று சற்றே கோபமடைந்தார். பிறகு நாங்கள் கூறினோம், ‘ஏப்ரல் ஃபூல் தாதா’ என்று.

 

 

இவ்வாறு அந்த ருசிகரச் சம்பவத்தைப் பற்றி யுவராஜ் சிங் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close