[X] Close

ஓய்வைக் கொண்டாடுங்கள் லெஜண்ட்: யுவராஜுக்கு வாழ்த்து கூறிய ஸ்டூவர்ட் பிராட்


  • kamadenu
  • Posted: 10 Jun, 2019 17:52 pm
  • அ+ அ-

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய அணி வீரர் யுவராஜ் சிங்குக்கு இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்  அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஒருவரான யுவராஜ் சிங் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று (திங்கட்கிழமை) அறிவித்தார்.

இந்நிலையில் யுவராஜின் ஓய்வு குறித்து இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட், ''ஓய்வைக் கொண்டாடுங்கள் லெஜண்ட்'' என்று வாழ்த்து கூறி யுவராஜுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

யுவராஜ் சிங் அடித்த புகழ்பெற்ற தொடர்ச்சியான அந்த 6 சிக்ஸர்கள் ஸ்டூவர்ட் பிராட் பந்து வீச்சுக்கு எதிரானதுதான். எனவே, ஸ்டூவர்ட் பிராட்டின் வாழ்த்தை ரசிகர்கள் பலரும் வரவேற்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close