[X] Close

பிரியாவிடை போட்டி அளிக்கிறோம்... ஆனால் யோ-யோ டெஸ்ட்டில் பாஸ் செய்யக் கூடாது என நிபந்தனை: பிசிசிஐ குறித்து யுவராஜ் சிங்


  • kamadenu
  • Posted: 10 Jun, 2019 17:24 pm
  • அ+ அ-

ஓய்வு அறிவிக்கும் முன் ரசிகர்கள் முன்னிலையில் கடைசி போட்டியை ஆடி பிரியாவிடை அளிக்க வாய்ப்புத் தருவதாகவும் ஆனால் யோ-யோ டெஸ்ட்டில் தோல்வியடைய வேண்டும் என்று பிசிசிஐ தன்னிடம் கூறியதாக ஓய்வு பெற்ற யுவராஜ் சிங் இன்று தெரிவித்தார்.

 

கடைசியாக ஜூன் 2017-ல் இந்தியாவுக்காக ஆடிய இந்த 2011 உலகக்கோப்பை தொடர் நாயகன் 17 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு இன்று ஓய்வு அறிவித்தார். ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்தும் அவர் தன் ஓய்வை அறிவித்தார்.

 

இந்நிலையில் ஓய்வு அறிவித்த போது நடைபெற்ற உணர்ச்சிகர செய்தியாளர்கள் சந்திப்பில் யுவராஜ் சிங் கூறும்போது, “யோ-யோ டெஸ்ட்டில் பாஸ் செய்யாவிட்டால் உங்களுக்கு பிரியாவிடை போட்டி அளிக்கிறோம்” என்று பிசிசிஐ தரப்பில் என்னிடம் கூறப்பட்டது” என்றார்.

 

பிரியாவிடை போட்டி கிடைக்கவில்லை என்பது பெரிய வலிதான் என்று இவரது சமகால அதிரடி வீரர் சேவாக் கூறியிருந்த நிலையில் இவரோ பிரியாவிடை போட்டியெல்லாம் தேவையில்லை என்கிறார்.

 

“நான் பிசிசிஐ-யில் ஒருவரிடமும் எனக்கு கடைசி பிரியாவிடை போட்டி வேண்டும் என்று நான் கூறவில்லை. நான் நன்றாக ஆடியிருந்தால் மைதானத்தில் ஓய்வு அளித்திருக்க முடியும். நான் ஒரு போதும் கூடுதலாக ஒரு போட்டியை கேட்பவனல்ல, நான் அந்த மாதிரி மனோநிலையில் கிரிக்கெட்டை ஆடியதில்லை.” என்றார் யுவராஜ் சிங்.

 

இனி யுவராஜ் சிங் பேட்டிங்கைப் பார்க்க வேண்டுமென்றால் 2 அயல்நாட்டு டி20 லீகுகளில் பார்க்கலாம் ஆனால் அதற்கும் பிசிசிஐ ஆட்சேபணையில்லை சான்றிதழ் வழங்க வேண்டும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close