[X] Close

”கோபம் உள்ள இடத்துலதான் குணமிருக்கும்”: கோலியைப் பாராட்டும் நெட்டிசன்கள்


  • kamadenu
  • Posted: 10 Jun, 2019 13:05 pm
  • அ+ அ-

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை ஆட்டத்தில் இந்திய ரசிகர்களின் ஒருபகுதியினர் முன்னாள் ஆஸி.கேப்டன் ஸ்மித்தை அநாகரிகமாக கேலி செய்தனர்.

இதனைக் கண்ட இந்திய அணி கேப்டன் கோலி ரசிகர்களை நோக்கி கேலி வேண்டாம், ஸ்மித்துக்கு உற்சாகமளியுங்கள் என்ற விதத்தில் செய்கை செய்து தன் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கோலியைப் பலரும் பாராட்டினர்.

அதில் சில நெட்டிசன்களின் பதிவுகள்...

V I J A Y V I R A T

கோவம் உள்ள இடத்துலதான்யா குணமிருக்கும்❤❤❤❤❤ விராட் கோலி...

Contractor Suresh Ponraj

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்

நாண நன்னயம் செய்துவிடல்!

கிங் கோலி யு பியூட்டி

Racket Raja ;-)ᴺᴷᴾ

என் அண்ணாமலை பேட்டிங்ல மட்டும் நம்பர் 1 இல்ல,

மனசு அளவுலயும் தான்.. 

G.Ѳ.А.T

தனக்கு நடந்தா திருப்பிக் கொடுக்கவும் தெரியும்....

அடுத்தவங்களுக்கு நடந்தா தட்டிக் கொடுக்கவும் தெரியும்...

ஸ்டாலின்

கேப்டன் ஆன பிறகும் போர் லைன் பக்கத்துல போய் நின்னு ஃபீல்டிங் பண்ற கேப்டன் கோலியா தான் இருக்கும் இதுவே உன்னை உயர்த்தும் கோலி     ❤️

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close