[X] Close

பும்ரா பந்து ஸ்டம்பில் பட்டும் பைல்கள் விழவில்லை; 5வது முறையாக இது நடக்கிறது.. ஏன்? ஒன்றும் புரியவில்லை: விராட் கோலி ஏமாற்றம்


5

  • kamadenu
  • Posted: 10 Jun, 2019 10:09 am
  • அ+ அ-

வேகப்பந்து வீச்சாளர் பந்து ஸ்டம்பில் படுகிறது ஆனால் பைல்கள் விழுவதில்லை இது ஏன்? இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 5வது முறையாக நேற்றும் வார்னருக்கு பும்ரா பந்தில் ஸ்டம்பில் பட்டும் பைல்கள் விழவில்லை. இது கோலிக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

 

இதற்கு முன்னர் கிறிஸ் கெய்லுக்கு பந்து பட்டு பைல் விழவில்லை, அதே போல் இலங்கை வீரர் திமுத் கருணரத்னே, தென் ஆப்பிரிக்காவின் குவிண்டன் டி காக், வங்கதேசத்தின் முகமது சைபுதின் ஆகியோருக்கும் இதே போல் நடந்தது. இதனால் ஏதாவது செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.

 

நேற்று பும்ரா பந்து ஒன்றை வார்னர் ஆட அது மட்டையின் உள்விளிம்பில் பட்டு ஸ்டம்பில் அடித்தது ஆனால் பைல்கள் விழவில்லை, வார்னர் அரைசதம் அடித்தார் ஆனால் ஆஸ்திரேலியா 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

 

இப்போதைய பைல்கள் ஏதாவது பட்டால் லைட் எரியும் வகையில் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கோலி ரிவியூ செய்தார்.

 

“கண்டிப்பாக, சர்வதேச அளவிலான ஒரு போட்டியில் இப்படி நடப்பதை நான் எதிர்பார்க்கவில்லை. லைட் எரிகிறது, தொழில்நுட்பம் கிரேட்தான் ஆனால் ஸ்டம்பை வேகமாக மோதினால்தான் பைல்கள் விழும் என்பதை எப்படி புரிந்து கொள்வது.

 

பந்து மோதுகிறது பைல்கள் விழவில்லை, இது எனக்கு ஆச்சரியமேற்படுத்துகிறது ஏனென்றால் வீசுபவர் வேகப்பந்து வீச்சாளர் மீடியம் பேஸ் பவுலர் அல்ல.

 

ஸ்டம்பும் வன்மையானதாக இல்லை. தளர்வாகத்தான் இருந்தது. ஸ்டம்பில் என்ன தவறு இருக்கிறது என்று தெரியவில்லை. ஸ்டம்பிங் அவுட்டர் கோட்டிங் காரணமா தெரியவில்லை.  லைட் எரிகிறது ஆனால் பைல் கீழே விழவில்லை, எனக்கு ஒன்றும்புரியவில்லை.

 

எந்த அணியும் இதை விரும்பாது நல்ல பந்தை வீசுகிறார் பேட்ஸ்மேன் அவுட் ஆகிறார் ஆனால் அவுட் இல்லை. பந்து ஸ்டம்பை அடிக்கிறது லை எரிவதில்லை, லைட் எரிகிறது ஆனால் பைல் விழவில்லை. இது போன்று அதிக முறை நடந்து நான் பார்த்ததில்லை” என்று விராட் கோலி ஏமாற்றத்துடன் தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close