[X] Close

விராட் கோலியின் 'டாப்’ ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் :‘இமேஜ்’ பல மடங்கு உயர்ந்தது- ஸ்டீவ் ஸ்மித் நெகிழ்ச்சி


  • kamadenu
  • Posted: 10 Jun, 2019 09:38 am
  • அ+ அ-

ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் பந்தை உப்புக் காகிதம் வைத்து தேய்த்த குற்றத்திற்காக ஓராண்டுகாலம் தடை செய்யப்பட்டு மீண்டும் ஆஸ்திரேலியாவுக்காக ஆடவந்துள்ளனர்.

 

இந்நிலையில் இவர்கள் இருவரையும் ரசிகர்கள் கடும் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர், குறிப்பாக இங்கிலாந்து ரசிகர்கள் இருவரையும் கடுமையாக கேலி செய்தனர். அப்போதெல்லாம் யாரும் ரசிகர்களைக் கண்டிக்கவில்லை.

 

நேற்றைய இந்திய-ஆஸ்திரேலிய ஆட்டத்திலும் இந்திய ரசிகர்களில் ஒரு பகுதியினர் ஸ்மித்தை பால் டேம்பரிங்கை வைத்து கடுமையாக கேலியும் கிண்டலும் செய்து வந்தனர்.

 

ஸ்மித் அப்போது பீல்ட் செய்து கொண்டிருந்தார். விராட்  கோலி பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.

 

ரசிகர்களின் ஸ்மித் மீதான கேலியும் கிண்டலும் அதிகரிக்க வெறுப்படைந்த விராட் கோலி ரசிகர்களை நோக்கி கையை அசைத்து ‘நிறுத்தங்கள்.. வேண்டாம்.. என்ன இது? ஸ்மித்தைக் கைகாடி அவருக்குக் கைத் தட்டுங்கள்’ என்று கூறி ரசிகர்களை திருத்தினார் விராட் கோலி.

 

இதனையடுத்து நெகிழ்ச்சியடைந்த ஸ்மித் விராட் கோலிக்கு கையை கொடுத்து அவரது முதுகில் தட்டிக் கொடுத்தார்.

 

இது ஆஸ்திரேலிய ஊடகத்தினர் கவனத்தைக் கவர்ந்து கோலியின் கிளாஸி ஸ்போர்ட்ஸ்மென்ஷிப் என்று செய்தி வெளியிட்டுள்ளனர்.

 

ஸ்மித் வார்னரை ரசிகர்கள் கிண்டல் செய்த இதுவரை எந்த அணியின் தலைவரும் களத்தில் இவ்வாறு ரசிகர்களைக் கண்டித்ததில்லை, இதில் விராட் கோலியின் இமேஜ் பலபடி உயர்ந்துவிட்டது

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close