[X] Close

எதிரணிகளை வீழ்த்த புதிய யுத்தி: டேவிட் வார்னர் பேட்டில் 'சென்ஸார் செப்': என்ன அது?


  • kamadenu
  • Posted: 09 Jun, 2019 15:48 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ.

உலகக் கோப்பைப் போட்டிக்கு தீவிரமாகத் தயாராகியுள்ள ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், எதிரணிகளை வீழ்த்த புதிய யுத்தியை கையாண்டுள்ளார். குறிப்பாக இதனது பேட்டிஸ் சென்ஸார் சிப் பொருத்தி விளையாடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிரணியின் பந்துகள் வரும் வேகத்துக்கு ஏற்ப எவ்வாறு பேட்டை கொண்டு செல்கிறோம், எந்த அளவுக்கு பேட்டின் அசைவு இருக்கிறது, எந்த மாதிரியான திசையில் பேட்டால் அடிக்கிறோம், எதிரணி வீரர்களின்  பந்துகள், பேட்டில் மோதும் வேகம் ஆகியவற்றை துல்லியமாக கணிக்கட முடியும்.

இதுபோன்ற பேட் சென்ஸார் சிப்பை பயன்படுத்த ஐசிசி கடந்த 2017-ம் ஆண்டு முறைப்படி அனுமதியளித்துவிட்டது. ஆனால், சர்வதேச அளவில் எந்த பேட்ஸ்மேனுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வு இல்லை. ஆனால், இதை வார்னர் கண்டறிந்து இந்த சிப்பை தனது பேட்டின் கைப்பகுதியில் பொறுத்தியுள்ளார்.

இந்த சிப்பை பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. பேட் சென்ஸ் என்ற பெயரில் இருக்கும் இந்த சிப் எதிரணியின் பந்துவீ்ச்சாளர்களுக்கு ஏற்றார்போல் எவ்வாறு பேட்டை கொண்டு செல்லலாம் என்பது குறித்த அறிவுரை வழங்கும். குறிப்பாக பும்ரா போன்ற வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துக்கு ஏற்றார்போல பேட்டை எந்த அளவுக்கு வேகமாக இயக்க முடியும் என்பதை புள்ளிவிவரங்களோடு இந்த சிப் கூறும்.

பேட்டின் கைப்பிடியில் பொறுத்தப்பட்டுள்ள இந்த சிப், பேட்ஸ்மேன் பேட்டிங் செய்யும் அவரின் ஆக்ஸன், பேட் நகர்தல், அடிக்கும்போது அதிர்வு, எந்தவேகத்தில் பேட்டை இயக்குகிறார்கள் என்பதை உள்வாங்கி கிளவுட் ஸ்டோரேஜில் மொபைல் மூலம் சேமிக்கும்.

எந்த சக்தியுடன் அடிக்கிறோம், அதிகபட்ச பேட்டின்,ஷாட்டின் வேகம், கைமணிக்கட்டை எவ்வாறு சுழற்றுகிறோம், பேக்லிப்ட் ஆங்கில், பேட் ஸ்டார்ட் ஆங்கில் ஆகியவற்றை அறிய முடியும்.

இதுகுறித்து இந்த சிப்பை தயாரித்து வழங்கும் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், " இந்த சிப்பை பயன்படுத்துவது குறித்து ஐசிசியுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். வார்னர் போட்டியில் பயன்படுத்துவாரா என்பது தெரியாது. பயன்படுத்தவும் வாய்ப்பு உண்டு. ஆனால், பயிற்சியின் போது இந்த சிப்பை வார்னர் பயன்படுத்தினார். இதில் உள்ள புள்ளிவிவரங்களை வைத்து தொழில்முறையிலான கிரிக்கெட் வீரர்கல் தங்களின் தவறுகளை திருத்தலாம். அல்லது வேகப்பந்துவீச்சு சுழற்பந்துவீச்சுக்கு எதிராக எவ்வாறு விளையாடலாம் , பேட் ஆக்சனை மாற்றலாம் என்பதை முடிவு செய்யலாம் " எனத் தெரிவித்தார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close