[X] Close

ஜோஃப்ரா ஆர்ச்சரின் ஒரே பந்தில் பவுல்டு,  ‘சிக்ஸ்’ எப்படி? - இங்கி-வ.தேச போட்டியில் ருசிகரம்


  • kamadenu
  • Posted: 08 Jun, 2019 22:15 pm
  • அ+ அ-

இங்கிலாந்து அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பிருந்தே ஜோப்ரா ஆர்ச்சர் செய்திகளில் தலைப்பாக மாறியிருந்தார், நடப்பு உலகக்கோப்பையில்  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தனது வேகம் மற்றும் எழுச்சி மூலம் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

 

ஆனால் இன்று நடைபெற்று வரும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் நடந்தது சற்றும் நம்ப முடியாதது என்பதோடு இதுவரை எந்த கிரிக்கெட்டிலாவது நடந்திருக்குமா என்பதும் தெரியவில்லை.

 

வங்கதேச தொடக்க வீரர்கள் சவ்மியா சர்க்கார், தமிம் ஆகியோரை ஜோப்ரா ஆர்ச்சர் தன் வேகத்தினால், ஸ்விங்கினால் கடும் சிரமத்துக்குள்ளாக்கினார். இதில் சவுமியா சர்க்கார் தடவிக்கொண்டிருந்தார்.

 

அப்போது ஒரு பந்தை ஆர்ச்சர் வீச நல்ல வேகத்துடன் வந்த அந்த பந்து அதாவது 90 மைல்கள் வேகம்.. சவுமியாவினால் ஒன்றும் செய்ய முடியவில்லை தவறான லைனில் வேறு ஆடியதால் பந்து நேராக ஆஃப் ஸ்டம்ப் பைலை அகற்றியதோடு நேராக எழும்பி விக்கெட் கீப்பருக்கு பின்னால் உயரே எழும்பி ஏதோ பேட்ஸ்மென் ஷாட் ஆடியது போல், யாரோ பந்தை த்ரோ செய்தது போல், கீப்பருக்குப் பின்னால் எழும்பி நேராக எல்லைக் கோட்டைக் கடந்து சென்றது. மட்டையில் பட்டிருந்தால் சிக்ஸ்.

 

ஆனால் இது பைல்களை தட்டிவிட்டு சென்ற சிக்ஸ். சவுமியா சர்க்கார் பவுல்டு, ஆனால் பந்து சிக்ஸ். இந்த ருசிகர அவுட் தற்போது சமூகவலைத்தளங்களில் வளைய வந்து கொண்டிருக்கிறது.

ஜோப்ரா ஆர்ச்சர் பவுல்டு ‘சிக்ஸ்’ வீடியோ 

இங்கிலாந்து அணி 386 ரன்கள் குவிக்க, வங்கதேச அணியில் ஷாகிப் அல் ஹசன் இங்கிலாந்துக்கு தான் ஒன்றும் சளைத்தவனல்ல என்பதைக் காட்டி 119 பந்துகளில் 121 ரன்கள் என்று பிரமாத சதம் கண்டு ஆட்டமிழந்தார்.

 

வங்கதேசம் 41 ஓவர் முடிவில் 235/5 என்று ஆடி வருகிறது, ஜெயிப்பது கடினம் என்று தொடக்கத்திலிருந்தே தெரிந்து ரன் ரேட்டுக்காக ஆடிவருகின்றனர். நிதானமான பொதுப்புத்தியுடன் கூடிய அணுகுமுறை பாராட்டத்தக்கது. ஓவருக்கு 16.88 ரன்கள் தேவை.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close