[X] Close

இந்தியாவை வீழ்த்துமா ஆஸி.: புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன


  • kamadenu
  • Posted: 08 Jun, 2019 17:22 pm
  • அ+ அ-

 

உலகக் கோப்பைப் போட்டியில் நாளை இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிகள், அதற்கு செக் வைக்கும் முயற்சியில் இந்திய அணியின் ஆட்டம், பும்ராவின் பந்துவீச்சு, கோலியின் பேட்டிங், தோனியின் அதிரடி, ஸ்மித்தின் பேட்டிங், வார்னரின் விளாசல் என பல காரணங்கள் இருக்கின்றன.

ஒரு அணிக்கு தொடக்கம் என்பது மிகவும் முக்கியம் அந்த வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஷிகர் தவண், ரோஹித் சர்மா இருவரும் கடந்த காலங்களில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார்கள்.  இதுவரை 21 இன்னிங்ஸ்களில் இருவரும் ஜோடியாக விளையாடி 1,146 ரன்கள் சேர்த்துள்ளார்கள். இருவரின் சராசரி 57.30,  5 முறை 100ரன்கள் வரையிலும் 2 முறை 50 ரன்கள் வரையிலும் நின்றுள்ளார்ள்.

அதேபோல, ஆஸ்திரேலிய அணியில் வார்னர், பிஞ்ச்கூட்டணி  8 போட்டிகளில் 635 ரன்கள் சேர்த்துள்ளார்கல். சராசரி 79, 2முறை 100ரன்களுக்கு மேலும், 3 முறை 50 ரன்களுக்கு மேலும் குவித்துள்ளார்கள். இவை தவிர சில புள்ளிவிவரங்களும் உள்ளன.

  1. இதுவரை ஆஸ்திரேலிய அணியும், இந்திய அணியும் 136 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளனர். இதில் இந்திய அணி 49 போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணி 77 போட்டிகளிலும் வென்றுள்ளது.
  2. உலகக் கோப்பைப் போட்டியில் இதுவரை ஆஸ்திரேலிய அணியும், இந்திய அணியும் 11 ஆட்டங்கள் விளையாடியுள்ளன. அதில் இந்திய அணி 3 முறையும், 8 முறை ஆஸ்திரேலிய அணியும் வென்றுள்ளன.
  3. கடந்த 2015-ம்  ஆண்டு உலகக்கோப்பைப்போட்டிக்கு பின் இரு அணிகளும் 18 ஒருநாள் ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் இரு அணிகளும் தலா 9 போட்டிகளில் வென்றுள்ளன. தலா இரு தொடரையும் கைப்பற்றியுள்ளன.
  4. 2019-ம் ஆண்டில் இந்திய அணியில் ஆஸ்திரேலியாவில்  சென்று ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும், இந்திய வந்த ஆஸ்திரேலிய அணி 3-2 என்ற கணக்கிலும் வென்றுள்ளது.
  5. 2017-ம்ஆண்டில் இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது. 2016-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய சென்ற இந்திய அணி 4-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை பறிகொடுத்தது.
  6. பேட்டிங்கை பொருத்தவரை கடந்த 2003-ம் ஆண்டு உலகக் கோபப்பைப் போட்டயின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக 2 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் சேர்த்ததே ஆஸியின் அதிகபட்சமாகும்.
  7. 2003-ம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 125 ரன்களுக்கு ரன்களுக்கு ஆல்அவுட் ஆனதே இந்திய அணியின் குறைந்தபட்சமாகும்.
  8. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்  உலகக் கோப்பைப் போட்டியில் அதிகபட்சமாக 303 ரன்கள் சேர்த்துள்ளார்.
  9. 2003-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 140 ரன்கள் பாண்டிங் சேர்த்ததே ஆஸி. வீரர் ஒருவர் இந்தியாவுக்கு எதிராக சேர்த்த அதிகபட்ச ஸ்கோராகும்.
  10. உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய, ஆஸ்திரேலிய போட்டிகளில் இதுவரை  7 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதில் 2 சதங்களை பாண்டிங் அடித்துள்ளார்.
  11. உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியா, ஆஸி இடையே 25 அரைசதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதில் சச்சின், அசாருதீன், சித்து ஆகியோர் தலா 2 அரைசதங்கள் அடித்துள்ளார்கள்.
  12. பந்துவீ்ச்சில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கபில்தேவ் உலகக் கோப்பைப்போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
  13. சிறந்த பந்துவீச்சாக கடந்த 1983-ம் ஆண்டில் இந்தியா, ஆஸி இடையிலான ஆட்டத்தில் ஆஸி வீரர் கென்னத் மெக்லே 39ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
  14.  இந்தியா, ஆஸி இடையே உலகக் கோப்பைப் போட்டியில் 3 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன. மெக்லே(6-39), கபில்தேவ்(5-43, 1983), பிளம்மிங்(5-36, 1996)
  15.  ஆஸி விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் அதிகபட்சமாக 7டிஸ்மிஸல்களை செய்துள்ளார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close