[X] Close

மொயின் அலிக்கு பதில் பிளங்கெட்: வங்கதேசம்  டாஸ் வென்று பவுலிங்


  • kamadenu
  • Posted: 08 Jun, 2019 15:21 pm
  • அ+ அ-

கார்டிபில் நடைபெறும் உலகக்கோப்பை 2019-ன் 12வது போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்துள்ளது.

 

இங்கிலாந்து அணியில் மொயின் அலிக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் லியாம் பிளங்கெட் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

பிட்ச் 2 நாட்களாக முழுதும் கவர் செய்யப்பட்டுள்ளதால் முதல் 1 மணி நேரம் பவுலிங்குக்குச் சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்துள்ளார் மோர்டசா.

 

ஒரு புறம் இந்த முடிவு தைரியம் என்று கூறலாம்... இன்னொரு புறம் அசட்டுத் தைரியம் என்றும் கூறலாம். வங்கதேசம் அதன் பலத்துக்கு ஆட வேண்டும், முதலில் பேட் செய்து அன்று பாகிஸ்தான் போல் ஆடாவிட்டாலும் ஒரு 275-280 அடித்து விட்டு மெஹதி ஹசன், ஷாகிப் உல் ஹசன் ஆகியோரை வைத்து கொஞ்சம் அச்சுறுத்தியிருக்கலாம் ஆனால் இப்போது இங்கிலாந்து அதிரடி தொடக்கம் கண்டு விட்டால் அவ்வளவுதான்...

 

இங்கிலாந்து அணி:

 

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ,  ஜோ ரூட், இயான் மோர்கன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ், ஆதில் ரஷித், லியாம் பிளங்கெட், ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் உட்.

 

வங்கதேச அணி: தமிம் இக்பால், சவுமியா சர்க்கார், ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம், மொகமது மிதுன், மஹ்முதுல்லா, மொசாடெக் ஹுசைன், மொகமது சைபுதின், மெஹிதி ஹசன் மிராஸ், மோர்டசா, முஸ்தபிசுர் ரஹ்மான்.

 

தொடக்கத்திலேயே ஷாகிப் அல் ஹசனுக்குக் கொடுத்து இன்னொரு முனையில் மோர்டசா வீசி வருகிறார். இங்கிலாந்து அணி 4 ஒவர்கள் 9 ரன் என்று இதுவரை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close