[X] Close

மறந்துடாதீங்க; பணம் இன்று வரும் நாளைக்கு போகும்.: டி வில்லியர்ஸை வறுத்தெடுத்த  சோயிப் அக்தர்


  • kamadenu
  • Posted: 08 Jun, 2019 12:42 pm
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

பணம் இன்று வரும் , நாளை போகும், உங்களுக்கு நாட்டைக் காட்டிலும் பணம்தான் முக்கியமாத் தெரிந்தது என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டிவில்லியர்ஸை வெளுத்துவாங்கிவிட்டார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர்.

உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி தான் மோதிய 3 ஆட்டங்களிலும் மிகமோசமான தோல்வியை அடைந்தது. அடுத்து வரும் 6 போட்டிகளையும் வென்றால்தான் அரையிறுதிச் சுற்றுக்குள் செல்ல முடியும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது.

தென் ஆப்பிரிக்க அணியின் இக்கட்டான நிலையைப் பார்த்த முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ், நிர்வாகம் அழைத்தால் உடனடியாக அணிக்குள் வரத்தயார் என்றார். ஆனால், டிவில்லியர்ஸ்  கோரிக்கையை நிராகரித்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் உங்கள் சேவை அணிக்குத் தேவையில்லை என்று கூறியது.

மேலும் தென் ஆப்பிரிக்க அணி நிறவெறித் தடைக்குப்பின் கடந்த 1992-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் இருந்து இதுவரை தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வி அடைந்தது இல்லை.

இந்த நிலையைப் பார்த்து டிவில்லியர், கேப்டன் டூப்பிளசிஸ்,பயிற்சியாளர் கிப்ஸன், தேர்வுக்குழுத் தலைவர் லிண்டோ ஜோடி ஆகியோரிடம் பேசியுள்ளார். ஆனால், டிவில்லியர்ஸ் மீண்டும் அணிக்குள் திரும்புகிறேன் என்ற கோரிக்கையை அவர்கள் நிராகரித்துவிட்டனர்.

கடந்த 2018-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணி மிகவும் மோசமான ஃபார்மில் இருந்தது. பல போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்து வந்தது. அந்த நேரத்தில் திடீரென தனது ஓய்வை அறிவித்தார் டிவில்லியர்ஸ். உலகக்கோப்பைப் போட்டிக்காக அணி தயாராகிவருகின்றபோது, டிவில்லியர்ஸ் ஓய்வு அணிநிர்வாகத்துக்கு  பெரும் அதிர்ச்சியை அளித்தது.

பல்வேறு நாடுகளில் சென்று லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும், பணம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றார்.

டிவில்லியர்ஸ் ஓய்வு குறித்தும், அவர் மீண்டும் வருவது குறித்தும் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் காட்டமாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

முதலில், டிவில்லியர்ஸ் செயலை யாரும் கண்டிப்பாக மறந்துவிடாதீர்கள். ஐபிஎல் மற்றும் பாகிஸ்தான் லீக் போட்டியில் விளையாட வேண்டுமா அல்லது சொந்த நாட்டு அணிக்காக விளையாட வேண்டுமா என்று டிவில்லியர்ஸ் மீது வந்த அழுத்த்தில் அவர்  தனது சொந்த அணியில் இடம் பெறாமல் ஓய்வை அறிவித்து டிவில்லியர்ஸ் ஐபிஎல், பிஎஸ்எல் தேர்வு செய்தார்.

உலகக் கோப்பைக்கான தனது சொந்த அணியில் இடம் பெறுவதில் இருந்து தப்பித்துக்கொண்டார். ஆக அனைத்தும் பணத்துக்காக மட்டுமே, பணத்தின் மீதான பற்றுதலால் மட்டுமே டிவில்லியர்ஸ் நடந்துள்ளார்.

ஆனால், டிவில்லியர்ஸ் ஓய்வு அறிவித்த நேரம், காலம்தான் கேள்விகளை எழுப்பியது. டிவில்லியர்ஸ் ஓய்வு அறிவித்தபோது, தென் ஆப்பிரிக்க மிக மோசமான ஃபார்மில் இருந்தது. அதாவது உலகக் கோப்பைப் போட்டிக்கா அணி தயாரிக்கொண்டிருந்த ஒரு ஆண்டுக்கு முன் டிவில்லியர்ஸ் தனது ஓய்வை அறிவித்தார்.

KOHLI-DEVILLIERS.jpg 

ஆனால் டிவில்லியர்ஸ் தன்னுடைய சேவை நாட்டுக்குத் தேவை என்பதை அவர் உணர்ந்திருக்கவேண்டும். பணம் இன்று வரும் நாளை போகும், ஆனால், பணம் சம்பாதிப்பதற்காக நாட்டுக்கு சேவைசெய்யும் வாய்ப்பை இழந்துவிட்டார் டிவில்லியர்ஸ், நாட்டை துச்சமாக்கிவிட்டார்.

பணம் சம்பாதிப்பவர்களைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், அதை சரியானவழியில் சம்பாதியுங்கள். உங்களுக்கு உண்மையிலேயே பணம் சம்பாதிக்கும் தேவை இருந்தால், அதற்குரிய வழியில் சம்பாதியுங்கள், ஆனால், உங்கள் நாட்டுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றபின் இப்போது உங்களுடைய பெயரை அணியில் சேர்க்கக் கோரி, கேவலமான கோரிக்கையை வைத்துள்ளீர்கள். என்னைப் பொருத்தவரை உங்களை போன்றநபரை எல்லாம் மீண்டும் அணியில்சேர்க்காமல் கோரிக்கையை நிராகரித்த தென் ஆப்பிரிக்க வாரியம் செய்தது சரியான செயல்தான்

இவ்வாறு அக்தர் பேசியுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close