[X] Close

வெற்றிப் பாதைக்கு திரும்புமா இங்கிலாந்து? வங்கதேச அணியுடன் இன்று பலப்பரீட்சை


  • kamadenu
  • Posted: 08 Jun, 2019 08:24 am
  • அ+ அ-

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகலில் கார்டிப் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து - வங்கதேச அணிகள் மோதுகின்றன.

தொடரை வெல்ல வாய்ப்புள்ள நாடுகளுள் முதன்மை அணியாக கருதப்படும் இங்கிலாந்து அணி கடந்த ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த நிலையில் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் 348 ரன்களை வாரி வழங்கியிருந்தனர்.

அதேவேளையில் கடந்த இருவருடங்களாக பேட்டிங்கில் தாக்குதல் ஆட்டத்தை தொடுத்து வரும் இங்கிலாந்து அணி இலக்கை எட்டுவதில் சற்று சுணக்கம் அடைந்தது. ஜோ ரூட், ஜாஸ் பட்லர் ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் விளாசி ஏறக்குறைய வெற்றியை நோக்கி அணியை நகர்த்தி சென்றனர். ஆனால் அவர்கள் ஆட்டமிழந்த பிறகு பின்கள வரிசைபேட்டிங்கிடம் இருந்து சிறந்த பங்களிப்பு இல்லாததால் தோல்வியை சந்திக்க நேரிட்டது. மேலும் இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் மோசமான பீல்டிங்கும் தோல்விக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக அமைந்திருந்தது.

இரு கேட்ச்களை தவறவிட்டது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதிலும் மொகமது ஹபீஸ் 14 ரன்களில் கொடுத்த எளிதான கேட்ச்சை ஜேசன் ராய் தவறவிட்டார். இந்த வாய்ப்பை சரியாக பயன்டுத்திக் கொண்ட மொகமது ஹபீஸ் 62 பந்துகளில் 84 ரன்கள் விளாசி மிரளச் செய்திருந்தார். இதனால் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

மஷ்ரஃப் மோர்டாசா தலைமையிலான வங்கதேச அணி தனது முதல் ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை தோற்கடித்திருந்தது. ஆனால் 2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக பேட்டிங்கில் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தத் தவறியது.

அந்த ஆட்டத்தில் 244 ரன்களையே சேர்த்த போதிலும் வங்கதேச அணியின் பந்து வீச்சாளர்கள் நியூஸிலாந்து அணிக்கு கடும் சவால்களை கொடுத்தனர். முதல் ஆட்டத்திலும் தென் ஆப்பிரிக்க அணியை வெகுவாக கட்டுப்படுத்தியிருந்தது வங்கதேச அணி. இதனால் இன்றைய ஆட்டத்திலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க வங்கதேச பந்து வீச்சு துறை முயற்சிக்கக்கூடும்.

கடந்த இரு ஆட்டத்திலும் அரை சதம் விளாசிய ஷகிப் அல் ஹசனிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். அவருடன் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான தமிம் இக்பால்,சவுமியா சர்க்கார் ஆகியோரும் நடுகள வரிசையும் சிறந்த பங்களிப்பை வழங்கினால் இங்கிலாந்து அணிக்கு சவால் கொடுக்க முயற்சிக்கலாம்.

அணி விவரம்

இங்கிலாந்து: இயன் மோர்கன், ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ், மொயின் அலி, டாம் கரண், லியாம் டாவ்சன், ஆதில் ரஷித், ஜேம்ஸ் வின்ஸ், மார்க் வுட், லியாம் பிளங்கெட்

வங்கதேசம்: மஷ்ரஃப் மோர்டாசா (கேப்டன்), தமிம் இக்பால், சவுமியா சர்க்கார், ஷகிப் அல் ஹசன், மஹ்மதுல்லா, முஸ்பிஹூர் ரகிம், மொசடக் ஹோசைன், மொகமது சைபுதின், ரூபல் ஹோசைன், லிட்டன் தாஸ், அபு ஜெயத், மெஹிதி ஹசன், மொகமது மிதுன், முஸ்பிஹூர் ரஹ்மான், சபிர் ரஹ்மான்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close