[X] Close

'இந்திய அணி பலவீனமானதுதான்': ஆஸி. அணிக்கு ஆலன் பார்டர் அறிவுரை


  • kamadenu
  • Posted: 07 Jun, 2019 16:21 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ.

இந்திய அணி பலவீனமான அணிதான், ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு தடையாக இருக்கக்கூடியவர்கள், கவனத்துடன் விளையாடவேண்டும் என்று ஆஸ்திரேலிய அணிக்கு முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் அறிவுரை கூறியுள்ளார்.

உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஆஸ்திரேலிய அணி தனது முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை 15 ரன்களில் வென்றது. இந்த சூழலில் இந்தியா, ஆஸ்திரேலிய இரு அணிகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை லீக் ஆட்டத்தில் விளையாட உள்ளன.

ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்திருந்த இந்தியஅணி அங்கு ஒருநாள் தொடரை வென்றது, அதற்கு பதிலடியாக மார்ச் மாதம் இந்தியா வந்திருநத ஆஸி. ஒருநாள் தொடரை கைப்பற்றிச் சென்றது. கடந்த 10 ஒருநாள் போட்டிகளாக தொடர்ந்து தோல்விகளைச் சந்திக்காமல் ஆஸி. வெற்றி நடைபோட்டு வருகிறது.

இந்தியாவுடனான போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணிக்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் அறிவுரை கூறியுள்ளார். ஐசிசி இணையதளத்தில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:

தென் ஆப்பிரிக்காவுடன் வெற்றி கண்டபின் இந்திய அணி ஏதோ சிறையில் இருந்து விடுபட்டதைப் போல் நான் நினைக்கிறேன். தென் ஆப்பிரிக்க அணி சிறப்பாக விளையாடினார்கள், ஆனால், ரன்கள் சேர்க்க தவறிவிட்டனர். ஆனால், அனைவரின் விளையாட்டையும் ரோஹித் சர்மா வாரிச்சுருட்டிவிட்டார்.

இந்திய பலவீனமான அணிதான்.  பலவீனங்களும் இருக்கின்றன. ஆனால், உலகத் தரம்வாய்ந்த பேட்ஸ்மேன்களான விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்மா, தோனி ஆகியோர் இருக்கிறார்கள். இவர்கள்தான் தடையாக இருப்பார்கள்.

ஆஸ்திரேலியா போட்டியில் வெல்ல வேண்டுமென்றால், முழுமையான சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தாதவரை வெற்றி பெற முடியாது. அவ்வாறு ஆஸ்திரேலியா விளையாடாவிட்டால் இந்திய அணி தடையாக மாறுவார்கள்.

இருபோட்டிகளில் ஆஸ்திரேலிய அணி நல்லவிதமாந வெற்றிகளைப் பெற்றாலும் இந்தியாவுக்கு எதிரான போட்டி கடினமாகவே இருக்கும். ஆதலால் அவர்களைச் சமாளிக்க சரியான திட்டமிடல் அவசியம்.

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளை எளிதாக வீழ்த்தும் அளவுக்கு வலிமைகொண்டதாக இருக்கின்றன. தென் ஆப்பிரிக்காவை வங்கதேசம் வீழ்த்தியது, இங்கிலாந்தை பாகிஸ்தான் வீழ்த்தியது. ஆதலால், எந்த நேரத்திலும் எந்த அணியும் அதிர்ச்சி அளிக்கும் என்பதை மனதில் வைத்து விளையாட வேண்டும்.

இவ்வாறு பார்டர் தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close