[X] Close

ஆப்கனுக்கு பின்னடைவு: தோனி போல் பேட் செய்யும் முகமது ஷேசாத் தொடரில் இருந்து விலகல்


  • kamadenu
  • Posted: 07 Jun, 2019 15:24 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான அகமது ஷேசாத் காயம் காரணமாக உலகக் கோப்பைத் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

ஷேசாத் விலகியுள்ளதையடுத்து, அவருக்கு பதிலாக 2 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவம் கொண்ட இக்ரம் அலி கில் சேர்க்கப்பட்டுள்ளார். தோனியின் பேட்டிங்கைப் போல் ஷேசாத்தின் பேட்டிங் ஸ்டைல் அமைந்திருப்பதால், இவரை ஆப்கனின் தோனி என்று ரசிகர்கள் அழைக்கிறார்கள்.

உலகக் கோப்பைப் போட்டியில் ஷேசாத் இரு ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும், இதற்கு முன் பலஆட்டங்களில் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெறவைத்துள்ளார்.  

இதுகுறித்து ஐசிசி விடுத்துள்ள அறிவிப்பில் " ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ஷேசாத் காயம் காரணமாக தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் இருக்கிறது. ஆதலால், அவருக்கு பதிலாக இக்ரம் அலி கில் சேர்க்கப்பட்டுள்ளார் " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close