[X] Close

'முட்டாள்கள், தோனி என்ன மகாபாரதப் போருக்கா போயிருக்கிறார்': பாக். அமைச்சர் ஆவேசம்


  • kamadenu
  • Posted: 07 Jun, 2019 12:21 pm
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

முட்டாள்தனமாக தோனியை பற்றிப் பேசுகிறார், தோனி என்ன மகாபாரதப் போருக்கா போயிருக்கிறார் என்று பாகிஸ்தான் அமைச்சர் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

சவுத்தாம்டன் நகரில் கடந்த 5-ம் தேதி இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான லீக் ஆட்டம் நடந்தது. அப்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனியின் கையில் அணிந்திருந்த கிளவுஸில் ராணுவத்தில் ஒரு பிரிவான பலிதான் ரெஜிமென்டின் முத்திரையைக் கையுறையில் அணிந்திருந்தார்.

இந்தக் காட்சி கேமராவில் ஜூம் செய்யப்பட்டு தோனியின் கையுறையில் ராணுவ பலிதான் பிரிவு முத்திரை இருப்பது காட்டப்பட்டது.

இந்தக் காட்சியைப் பார்த்த தோனியின் ரசிகர்கள், தோனிக்கும் இருக்கும் நாட்டுப்பற்றைப் புகழ்ந்து, சமூக ஊடகங்களில் அவரைப் பாராட்டினர். தோனி கையுறையில் பலிதான் முத்திரை படம் நேற்று சமூக ஊடகங்களிலும் வைரலானது.

ஆனால், அனைத்துவிதமான வேறுபாடுகளை மறந்து விளையாடும் ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் ஒருநாட்டின் ராணுவ முத்திரையைப் பதித்து விளையாடுவதை ஐசிசி விரும்பவில்லை.

உடனடியாக தோனியின் கிளவுஸில் இருக்கும் முத்திரையை நீக்குமாறு பிசிசிஐ அமைப்புக்கும், தோனிக்கும் ஐசிசி அறிவுரை வழங்கியது.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமைச்சரவையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருக்கும் பவாத் சவுத்ரி தோனியின் செயலுக்கு  பாராட்டு தெரிவிக்கும் ஊடகங்களையும், பாராட்டுபவர்களையும் சாடியுள்ளார்.

பவாத் சவுத்ரி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் " இங்கிலாந்துக்கு தோனி கிரிக்கெட் விளையாடத்தான் போயிருக்கிறார். மகாபாரதப் போருக்கு செல்லவில்லை. இந்திய ஊடகங்கள் என்ன ஒரு முட்டாள்தனமான விவாதத்தை இந்திய ஊடகங்கள் வைக்கின்றன. போரைப் பற்றி கவலைப்படும் சில இந்திய ஊடகங்கள் தொழில்ரீதியாக தோனியை ராணுவ வீரராக்கி, அவரை சிரியா, ஆப்கானிஸ்தான் அல்லது ரவாண்டாக்கு அனுப்பி வையுங்கள். முட்டாள்கள் " என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close