[X] Close

எடுத்த எடுப்பில் கேட்சை விட்ட டுபிளெசிஸ்; வேதனையில் கத்திய ரபாடா; தவண் ஏமாற்றம்


  • kamadenu
  • Posted: 05 Jun, 2019 19:47 pm
  • அ+ அ-

228 ரன்கள் இலக்கை எதிர்த்து இந்திய அணி ஆடி வருகிறது, ஆனால் எடுத்த எடுப்பிலேயே ஷிகர் தவணின் எட்ஜைப் பிடித்தார் ரபாடா, இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 13 ரன்கள்.

 

தென் ஆப்பிரிக்க அணியின் கிறிஸ் மோரிஸ், ரபாடா நெருப்பு பொறிபறக்க வீசி வருகின்றனர்.

 

ரோஹித் சர்மாவும் வெளியேறியிருப்பார், ஆனால் டுப்ளெசிஸ் ரபாடா பந்தில் கேட்சை விட்டார். 2வது ஓவரின் 4வது பந்து ஷார்ட் பிட்ச் எகிறு பந்தாக ரோஹித் சர்மா அதனை புல் ஆடினாரா அல்லது என்ன ஆடினார் என்று தெரியவில்லை பந்து கிளவ்வில் பட்டு இரண்டாவது ஸ்லிப்புக்கு முன்னால் காற்றில் உயரே எழும்ப  டுப்ளெசிஸ் 2வது ஸ்லிப்பில் தாமதமாக முயன்றார், கடைசியில் முன்னால் டைவ் அடித்து கேட்சை விட்டார். நல்ல வாய்ப்பு பறிபோன ரபாடா வாய்விட்டு கத்தியே விட்டார்.

 

அதன்பிறகு மோரிஸ் ஒரு பந்தை கொஞ்சம் எழுப்ப ரோஹித் சர்மா தடுத்தாடியது விளிம்பில் பட்டு பாயிண்டில் டுமினி தலைக்கு மேல் சென்று சற்றே பின்னால் விழுந்தது. ரோஹித் செம தடவல் தடவிக்கொண்டிருக்கிறார்.

 

இந்நிலையில் ரபாடாவின் ஒரு 150 கிமீ வேக யார்க்கர் ஷிகர் தவண் மட்டையின் கீழ்பக்கவாட்டுப் பகுதியை உடைத்தது, மட்டையின் சிதறல் மைதானத்தில் தெறித்தது. வேறு மட்டைதான் வேண்டியிருந்தது.

 

ஆனால் வேறு மட்டைக்கு வேலையே இல்லை ரபாடா ஒரு பந்தை தவணுக்குக் குறுக்காக கடினமான ஆங்கிளில் குத்தி வெளியே எடுக்க கொஞ்சம் உயரமாக வந்து மட்டையின் விளிம்பில் லேசாகப் பட்டு டிகாக்கிடம் கேட்ச் ஆனது, ரபாடாவுக்கு இந்த விக்கெட் தகுதியானதே.

 

விராட் கோலி இறங்கியவுடன் 146 கிமீ வேக பவுன்சரில் வரவேற்றார் ரபாடா.  இந்திய அணி 14/1 என்று ஆடிவருகிறது 7 ஓவர் முடிந்து விட்டது. புதிய பந்து பழையதாகும் போது ஆட்டம் கொஞ்சம் சுலபமாகும், அதற்குள் விக்கெட்டுகளை இழந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close