[X] Close

டாஸ் வென்றார் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸ்


  • kamadenu
  • Posted: 05 Jun, 2019 18:19 pm
  • அ+ அ-

உலகக் கோப்பையில் லண்டனில் நடக்கும் வங்கதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸ் டாஸ் வென்று ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்துள்ளார்.

லண்டன் ஓவல் மைதானத்தில் போட்டி பகலிரவாக நடக்கிறது. வங்கதேசமும், நியூஸிலாந்து அணியும் தங்களின் முதல் லீக் ஆட்டத்தில் வென்று இன்று 2-வது போட்டியைச் சந்திக்கின்றன.

வங்கேதசம் அணி முதல் ஆட்டத்தில் வலிமை மிக்க தென் ஆப்பிரிக்காவை 14 ரன்களில் வீழ்த்தியும், நியூஸிலாந்து அணி தனது முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது.

உலகக் கோப்பை போட்டியில் இதுவரை ஒருமுறைகூட நியூஸிலாந்து அணியை வங்கதேசம் வென்றது இல்லை என்பது நியூஸிலாந்துக்கு சாதகமானது.

டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். வங்கதேசம், நியூஸிலாந்து ஆகிய இரு அணிகளிலும் கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் மாற்றமில்லாமல் விளையாடுகின்றனர்.

ஆடுகளம் நிலைமை என்ன?

லண்டனில் உள்ள ஓவல் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரி. முதலில் பேட் செய்யும் அணி பொறுமையாக பேட் செய்து 15 ஓவர்கள் வரை விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டால் 300 ரன்களுக்கு மேல் தாராளமாக அடிக்க முடியும்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close