[X] Close

அரை இறுதியில் ஜோகன்னா ஹோன்டா


  • kamadenu
  • Posted: 05 Jun, 2019 10:17 am
  • அ+ அ-

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவில் இங்கிலாந்தின் ஜோகன்னா ஹோண்டா அரை இறுதிக்கு முன்னேறினார்.

பிரான்சின் பாரிஸ் நகரில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 26-ம் நிலை வீராங்கனையான இங்கிலாந்தின் ஜோகன்னா ஹோன்டா, 7-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஸ்டீபன்ஸை எதிர்த்து விளையாடினார்.

ஒரு மணி நேரம் 11 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகன்னா ஹோன்டா 6-1, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இதன் மூலம் 36 வருடங்களுக்குப் பிறகு பிரெஞ்சு ஓபன் அரை இறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் ஜோகன்னா ஹோன்டா. கடைசியாக 1983-ம் ஆண்டுஅந்நாட்டைச் சேர்ந்த ஜோ துரிஅரை இறுதிக்கு முன்னேறிஇருந்தார்.

அரை இறுதியில் ஜோகன்னா ஹோன்டா, செக்குடியரசின் மார்கெட்டா வாண்ட்ரோசோவா அல்லது குரோஷியாவின் பெட்ரா மார்டிக்குடன் மோதக்கூடும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close