[X] Close

இரண்டு பெண்களுடன் ரவி சாஸ்திரி: புகைப்படத்துக்கு நெட்டிசன்கள் கடும் கிண்டல்


  • kamadenu
  • Posted: 04 Jun, 2019 19:53 pm
  • அ+ அ-

-ஐஏஎன்எஸ்

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 2 பெண்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பாகிஸ்தானைச் சேர்ந்த ரசிகர் என்று  கூறிக்கொள்ளும் நபர் ஒருவரும், ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ட்விட்டர் ஆளுமை டெனிஸ் பிரீட் மேன் ஆகியோர் கடுமையாகக் கிண்டலடித்துள்ளனர்.

 

ட்விட்டரில் ஃப்ரீட்மேன், “இந்திய அணியின் உலகக்கோப்பைத் தயாரிப்புகள் நன்றாகப் போய்க்கொண்டிருப்பது போல் தெரிகிறது” என்று கிண்டலடித்துள்ளார்.

 

இந்த ஃபிரீட்மேன் போஸ்ட்டுக்குக்  கீழ் பலரும் கிண்டல் செய்து கருத்து பதிவிட்டு வருகின்றனர், ஒரு பயனாளர், “ஃபைன் லெக்கில் பீல்டிங்” என்ரும் இன்னொரு நெட்டிசன் “நாம் களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நன்றாக ஆடுகிறோம்” என்று கேலி செய்துள்ளார்.

 

இன்னொரு பாகிஸ்தானிய ரசிகர், “டியர் கேர்ல்ஸ் ரவி சாஸ்திரி யார் என்று தெரியாவிட்டால் அசார் திரைப்படத்தைப் பாருங்கள்” என்று கூறியுள்ளார்.

 

இந்திய ரசிகர் ஒருவர் இந்தப் புகைப்படத்தை விரும்பாமல், “வார்னேயை விட சிறந்த ‘ப்ளெ பாய்’ போல் தெரிகிறது” என்று ரவிசாஸ்திரியை கேலி செய்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close