[X] Close

புதிய உலக சாதனை: ஒருநாள் போட்டிகளில் வங்கதேச வீரர் சஹிப் அல் ஹசன் மைல்கல்


  • kamadenu
  • Posted: 03 Jun, 2019 11:50 am
  • அ+ அ-

வங்கதேச அணி வீரர் சஹிப் அல் ஹசன் ஒருநாள் போட்டிகளில் புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இங்கிலாந்தில் 12-வது உலகக் கோப்பைப் போட்டிகள் நடந்து வருகின்றன. லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேசம் அணி 21 ரன்களில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் வங்கதேசம் அணியின் முக்கிய வீரர் சஹிப் அல்  ஹசன் பேட்டிங்கில் 75 ரன்களும், ஒருவிக்கெட்டையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். அதோடு மட்டுல்லாமல் புதிய உலகசாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் குறைந்த ஆட்டங்களில் விளையாடி  250 விக்கெட்டுகளையும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை குவித்த வீரர்களில் சகிப் அல் ஹசன் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

199 போட்டிகளில் சஹிப் அல் ஹசன் 250 விக்கெட்டுளையும், 5 ஆயிரத்து 792 ரன்களும் சேர்த்து குறைந்த ஆட்டங்களில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் உலக சாதனையைப் படைத்தார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மார்க்ரம் விக்கெட்டை சஹிப் அல் ஹசன் வீழ்த்தியபோது இந்த சாதனையை அவர் நிகழ்த்தினார்.

bang.jpg 

இதில் விரைவாக 250 விக்கெட்டுகளை 199 போட்டிகளில் சஹிப் அல்  ஹசன் மட்டுமே எட்டி சாதனை படைத்துள்ளார். அதற்கு அடுத்த இடத்தில் ரசாக் 258 போட்டிகளிலும், அப்ரிடி 273 போட்டிகளிலும், காலிஸ் 296 போட்டிகளிலும், ஜெயசூர்யா 304 போட்டிகளிலும் 250 விக்கெட்டுகளை எட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா, பாகிஸ்தான் வீரர் அப்துல் ரசாக், ஷாகித் அப்ரிடி, தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஜேக்ஸ் காலிஸ் ஆகியோர் மட்டுமே 250 விக்கெட்டுகளையும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களையும் சேர்த்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

250  விக்கெட்டுகள் + 5 ஆயிரத்துக்கும் மேல் ரன்கள்

1. பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் 269 விக்கெட்டுகளையும் 5080 ரன்கள் சேர்த்துள்ளார்.

2. பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி 395 விக்கெட்டுகளையும், 8,064 ரன்கள் சேர்த்துள்ளார்

3.இலங்கை முன்னாள் வீரர் ஜெயசூர்யா 323 விக்கெட்டுகளையும் 13,430 ரன்களும் சேர்த்துள்ளார்.

4.தெ.ஆப்பிரிக்க முன்னாள்வீரர் ஜேக்ஸ் காலிஸ் 273 விக்கெட்டுகளையும், 11,579 ரன்களும் சேர்த்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close