[X] Close

'குறைத்து மதிப்பிடாதீங்க...நான் வேகப்பந்துவீச்சாளர்தான்': ஆன்ட்ரூ ரஸல் கோபம்


  • kamadenu
  • Posted: 01 Jun, 2019 13:08 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

என்னை பேட்ஸ்மேன், மிதவேகப்பந்துவீச்சாளர்கள் என்று குறைத்து மதிப்பிடுகிறார்கள், ஆனால், உண்மையில் வேகப்பந்துவீச்சாளர் என்று மேற்கிந்தியத்தீவுகள் வீரர் ஆன்ட்ரூ ரஸல் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைப் போட்டியில் நாட்டிங்ஹாமில் நேற்று நடந்த 2-வது ஆட்டத்தில் பாகி்ஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மேற்கிந்தியத்தீவுகள் அணி. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாக இருந்தது ஆன்ட்ரூ ரஸல்தான்.

 தொடக்கத்தில் அவர் வீழ்த்திய விக்கெட்டுகளால் நெருக்கடிக்கு உள்ளாகிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இந்த ஆட்டத்தில் ஆன்ட்ரூ ரஸல் 3 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன், 4 விக்கெட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பொதுவாக ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியில் இடம் பெற்றிருந்த ரஸலின் அதிரடியைப் பார்த்து ரஸல் அதிரடி ஆட்டக்காரர் என்றே நினைத்திருந்தார். எந்த இடத்தில் களமிறங்கினாலும் ரஸல் அதிரடியாக பேட் செய்து போட்டியின் முடிவை மாற்றக்கூடியவர் என்று வர்ணிக்கப்பட்டது. ஐபிஎல் போட்டியில் ரஸலின் பந்துவீச்சு பெரிதாக பேசப்படாவிட்டாலும்கூட இவரின் அதிரடியான ஆட்டத்துக்கு தனி ரசிகர்கள் இருந்தனர்.

இப்போது உலகக் கோப்பைப் போட்டிக்கான மேற்கிந்தியத்தீவுகள் அணியில் ரஸல் இடம் பெற்றிருப்பதால், ரஸலின் பந்துவீச்சைக் காட்டிலும் பேட்டிங்கைக் காண ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் பந்துவீச்சிலும் ரஸல் கலக்கினார்.

russ.jpg 

கட்டுக்கோப்பான பந்துவீச்சு குறித்து ரஸலிடம் நிருபர்களிடம் கேட்டபோது அவர் கூறுகையில், " அணியில் சிறந்த பேட்ஸ்மேன், அதிரடி ஆட்டக்காரர் என்றுதான் என்னைப் பார்க்கும் ஏராளமானோர் கூறுகிறார்கள். ஆனால் நான் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர் என்பதை ஏராளமானோர் மறந்துவிட்டார்கள்.

என்திறமையை குறைத்து மதிப்பிடுகிறார்கள். என்னை மிதவேகப்பந்துவீச்சாளராக மக்கள் குறைத்து மதிப்பிட்டுவிட்டார்களே என்று கடந்த 2 ஆண்டுகளாக பொறாமையுடன் இருந்தேன்.

என்னை திரையில் பார்த்தவுடன் ரசிகர்கள் ரஸல் வந்துவிட்டார், மிதவேகப்பந்துவீச்சாளர் வந்துவிட்டார், பிக் ஹிட்டர் வந்துவிட்டார் என்றுதான் கூறுகிறார்கள். நான் கேட்கிறேன் யார் உங்களை என்னை மிதவேகப்பந்துவீச்சாளர் என்று கூறச் சொன்னது.

உண்மையில் அவ்வாறு மக்கள் என்னை மிதவேகப்பந்துவீச்சாளர் என்று கூறும்போது எரிச்சலாக இருக்கிறது. அவ்வாறு கூறுபவர்கள் மாற்றிக்கொண்டு என்னை வேகப்பந்துவீச்சாளர் என்று அழைக்க வேண்டும்.

என்னுடைய வேகப்பந்துவீச்சின் வேகத்தை மணிக்கு 190கி.மீ வேகத்தில் வீசிக்காட்டியிருக்கிறேன். இங்கிலாந்தில் இருக்கும் பவுன்ஸர் ஆடுகளங்களில் எளிதாக வேகப்பந்துவீச்சை வெளிப்படுத்த முடியும், உற்சாகத்துடன் பந்துவீச முடியும். " எனத் தெரிவித்தார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close