[X] Close

'1992 வரலாறு திரும்பும், அவ்வளவுதான் முடிந்துவிட்டது என்று பாகிஸ்தானை ஒருபோதும் கூறாதீர்கள்': வக்கார் யூனிஸ் எச்சரிக்கை


1992

  • kamadenu
  • Posted: 01 Jun, 2019 15:10 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

உலகக்கோப்பைப் போட்டியில் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் தோற்றுவிட்டதால், அவ்வளவுதான் முடிந்துவிட்டது என்று ஒருபோதும் எண்ணாதீர்கள், 1992-ம் ஆண்டு வரலாறு திரும்பும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மேற்கிந்தியத்தீவுகள் அணி. முதல் போட்டியிலேயே மோசமாக விளையாடிய பாகிஸ்தான் அணியை அந்நாட்டு ரசிகர்கள் வலைதலங்களில் காயச்சி எடுத்து வருகின்றனர், முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வக்கார் யூனிஸ் 1992-ம் ஆண்டு வரலாறு திரும்பும், பாகிஸ்தானை குறைத்து எடைபோடாதீர்கள் என்று ஆதரவு தெரிவித்துள்ளார். வக்கார் யூனிஸ் ஐசிசியின் இணையதளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:

youis.jpg 

உலகக் கோப்பைப் போட்டி நீண்டநாட்கள் நடக்கும் தொடர். இன்னும் பாகிஸ்தான் அணிக்கு அதிகமான ஆட்டங்கள் இருக்கின்றன. ஆனால் ஒருபோட்டியில் தோற்றுவிட்டோம் என்பதற்காக எங்கள் கதை முடிவிட்டதுபோல் முட்டாள்தனமாக பேசக்கூடாது.

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் திணறும் வகையில் பந்துவீசிய மேற்கிந்திய பந்துவீச்சாளர்கள் பாராட்டுக்கு உரியவர்கள். அதிலும் ஆன்ட்ரூ ரஸல் தான் வீசிய முதல் 3 ஓவர்கள்ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்துவிட்டது. இரு விக்கெட்டுகளை ரஸல் வீழ்த்தினாலும் அவை முக்கியமானவை.

இதற்கு முன் இதேபோன்றுதான் பாகிஸ்தான் குறித்து பலவாறு தவறாகப் பேசப்பட்டன. ஆனால், பாகிஸ்தான் அணி யாராலும் கணிக்க முடியாத அணி.

கடந்த 1992-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியின்போது முதல் ஆட்டத்தில் நாங்கள் தோற்றோம். அப்போதும் இப்படித்தான் பேசினார்கள். ஆனால், அடுத்தடுத்து நாங்கள் மீண்டுவந்து, நாங்கள் உலகக்கோப்பையை கைப்பற்றினோம். ஆதலால், 27 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததுபோல் இப்போதும் நடக்கலாம். வரலாறு திரும்பும். தோல்வியால் அப்படியே அடங்கிவிடமாட்டோம்.

தோல்வி என்பது அணியின் நம்பிக்கைக்கு சேதாரம்தான். ஆனால், இழந்த நம்பிக்கையை பெற்று நாங்கள் மீண்டு எழுவோம், அதற்கு சிறிதுநேரம் எடுக்கும். அதுவரை பாகிஸ்தான் வீரர்கள் அமைதியாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் ஓய்வறையில் இருக்கும் ஒவ்வொரு வீரர்களும் மனவேதனையுடன்தான் இருப்பார்கள், ஆனால், நம்பிக்கையுடன் எழுவார்கள். இந்த தோல்வி எப்படி ஏற்பட்டது என்பதை ஆய்வு செய்து, தோல்வியில் இருந்து பாடம் கற்க வேண்டும்.

இவ்வாறு வக்கார் யூனுஸ் தெரிவித்தார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close