[X] Close

ஆர்சனல் கால்பந்து அணியின் முன்னாள் வீரர் விபத்தில் மரணம்


  • kamadenu
  • Posted: 01 Jun, 2019 18:23 pm
  • அ+ அ-

ஸ்பெயின் மற்றும் ஆர்சனல் கிளப் அணியின் முன்னாள் கால்பந்து  வீரர் அந்தோனியோ ரியாஸ் கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 35.

இதுகுறித்து ஆர்சனல்அணி தனது ட்விட்டர் பக்கத்தில் ,” இது அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தி. நமது முன்னாள் வீரர்  அந்தோனியோ ரியாஸ் கார் விபத்தில் உயிரிழந்திருக்கிறார். அவரது ஆன்மா சாத்தியடைய வேண்டி கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

அந்தோனியோ ரியாஸ் சிறந்த வீரர் மற்றும் சிறந்த மனிதர் என்று சக கால்பந்து வீரர்கள் அவரது மறைவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர்.

அந்தோனியோ ரியாஸ் மரணம் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close