[X] Close

பால் டேம்பரிங்குக்குப் பிறகு ஸ்மித், வார்னர் முதல் போட்டியில்: ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்


  • kamadenu
  • Posted: 01 Jun, 2019 18:01 pm
  • அ+ அ-

பிரிஸ்டலில் நடைபெறும் இன்றைய 2வது பகலிரவு உலகக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. பால் டேம்பரிங் விவகாரத்துக்குப் பிறகு முதல் சர்வதேசப் போட்டியில் ஸ்மித், வார்னர் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

 

டாஸ் வென்ற ஆப்கான் கேப்டன் குல்பதின் நயீப் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். இது நல்ல முடிவுதான் டீசண்ட் ரன்னை ஸ்கோர் செய்து ஸ்பின் பலவீனமான ஆஸ்திரேலிய அணியை ரஷீத் கான், முஜிபுர் ரஹ்மான், மொகமது நபி ஆகிய ஸ்பின் பலத்தை வைத்து ஏதாவது செய்யப் பார்க்கலாம். ஆகவே ஒரு சுவாரசியமான போட்டி காத்திருக்கிறது.

 

அதே போல் அதிரடி தொடக்க வீரர்கள் விக்கெட் கீப்பர் ஷஜாத் மற்றும் ஹஸ்ரத்துல்லா சஸாய் ஆகியோர் கமின்ஸ், நைல், ஸ்டார்க் வேகத்தை எப்படி அதிரடி தொடக்கமாக மாற்றுவார்கள் என்பதும் இன்னொரு சுவாரஸியம்.

 

ஆஸ்திரேலிய அணி:

 

பிஞ்ச், வார்னர், ஸ்மித், கவாஜா, மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரி, பாட் கமின்ஸ், நேதன் கூல்டர் நைல், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்ப்பா.

 

ஆப்கானிஸ்தான் அணி:

 

மொகமத் ஷஜாத், ஹஸ்ரதுல்லா சஸாய், ரஹ்மத்  ஷா, ஹஷ்மதுல்லா ஷாஹிதி, நஜிபுல்லா ஸத்ரான், மொகமது நபி, குல்பதின் நயீப், ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், ஹமித் ஹசன், தவ்லத் ஸத்ரான்.

 

முன்னாள் கேப்டன் அஷ்கர் ஆப்கான் அணியிலிருந்து நீக்கம்!!

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close