[X] Close

உலகக்கோப்பை  ஆட வந்த இடத்தில் ‘பிக்னிக்கா?’ - இந்திய அணியைச் சாடிய நெட்டிசன்கள்


  • kamadenu
  • Posted: 01 Jun, 2019 17:42 pm
  • அ+ அ-

-பிடிஐ

உலகக்கோப்பை 2019-ன் முதல் போட்டியில் 5ம் தேதி தென் ஆப்பிரிக்காவை இந்திய அணி சந்திக்கிறது. பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய பேட்டிங் பவுலிங் தரங்கள் அம்பலமான நிலையில் இந்திய அணி வலைப்பயிற்சிக்கு ஓய்வு கொடுத்து அருகில் உள்ள இடத்துக்கு பிக்னிக் சென்ற புகைப்படங்களை பிசிசிஐ தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்ததையடுத்து தொடங்கியது விவகாரம்.

 

வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஒழுங்காக வீசிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்திய டாப் ஆர்டர் தோல்வியடைய, சொத்தையாக வீசிய ஸ்பின் பவுலிங்கில், ஏறத்தாழ நெட் பவுலிங் போல் இருந்த ஸ்பின் பந்து வீச்சில் ராகுல், தோனி சதம் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது, அதுவும் வங்கதேசம் இந்தியப் பந்து வீச்சை நன்றாகவே ஆடியது. பெரிய சிரமங்களை எதிர்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த பிசிசிஐ ட்வீட்டைப் பார்த்தவுடன் நெட்டிசன்கள் பொங்கி விட்டனர். வலைப்பயிற்சியில் ஈடுபடாமால் என்ன பிக்னிக் வேண்டிக்கிடக்கிறது என்ற ரீதியில் நூற்றுக்கணக்கான நெட்டிசன்கள் இந்திய அணியை விமர்சனம் செய்ததோடு கேலியும் செய்து வருகின்றனர்.

 

 இன்னும் சில பயனாளர்கள், “யார் பிராக்டிஸ் செய்கிறார்கள்?” என்று கேட்டுள்ளனர். இன்னும் சில பயனாளர்கள் உலகக்கோப்பை ஆடத்தான் சென்றிருக்கிறோமே தவிர பிக்னிக் அல்ல, இன்னும் சிலர் கோபாவேசமாக உலகக்கோப்பையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை பாகிஸ்தானிடம் தோற்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

அதே போல் இந்த ‘ட்ரிப்’ குறித்து இந்திய வீரர்கள் தனிப்பட்ட தங்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டதற்கும் நெட்டிசன்கள் எதிர்மறையாக விமர்சித்துள்ளனர். ஆனால் ஹர்திக் பாண்டியா ‘ரியல் லைஃப்’ என்று பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில் பலரும் ஏன் பும்ரா படத்தைக் கத்தரித்தாய் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

மேலும், சிலர் ஒரேயடியாக பயிற்சி பயிற்சி என்று இருந்தால் அது கடினமாகிப் போய்விடும் வீரர்கள் ரிலாக்ஸ் செய்து மகிழ்ச்சியுடன் களமிறங்குவதுதான் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று ஆதரவாகப் பதிவிட்டுள்ளனர்.

 

தென் ஆப்பிரிக்க அணி அடிபட்ட புலி, எனவே இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெறுவதை குறிக்கோளாகக் கொண்டு அந்த அணி களமிறங்கும். இந்நிலையில் இந்திய அணி அவர்களுக்கு எதிரான தனிப்பட்ட வீரர்களை வீழ்த்தும் உத்திகளை ஹோட்டல் அறையில் அமர்ந்து வகுக்க வேண்டியுள்ளது.

 

இந்நிலையில் பிக்னிக் போட்டோக்கள் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close