[X] Close

‘டெஸ்ட் மேட்ச் போல் அட்டாக் செய், மிட்ஆன், மிட்ஆஃப் மேல் முடிந்தால் தூக்கி அடி என்று சவால் விடு’- சச்சின் தடாலடி ஆலோசனை


  • kamadenu
  • Posted: 31 May, 2019 15:48 pm
  • அ+ அ-

நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர்,  ஆப்கான் ஸ்பின்னர் ரஷீத் கான், இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர்கள் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

 

ஸ்டார்ஸ்போர்ட்ஸ் வர்ணனைக் குழுவில் தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள சச்சின் டெண்டுல்கர் உற்சாகத்துடன் பல கருத்துகளை கூறிவரும் நிலையில் ஆட்டத்தின் நுணுக்கங்கள் குறித்தும் நன்றாகப் பேசி வருகிறார். இன்றைய அளவில் ஆட்டத்தின் நுட்பங்களைப் பேச ஆளில்லை, குறிப்பாக இந்திய வர்ணனையாளர்கள் (தமிழ், ஆங்கிலம்) ஹீரோ வொர்ஷிப் முறையில் வர்ணனை செய்கின்றனர். ஆட்டத்தின் நுணுக்கங்களை அவ்வளவாக சொல்வதில்லை.

 

இந்நிலையில் ஆப்கான் லெக் ஸ்பின்னர் ரஷீத் கானுக்கு அறிவுரை வழங்கிய சச்சின் டெண்டுல்கர், “இந்த உலகக்கோப்பையில் பல அதிர்ச்சிகளைத் தரவல்லவர் ரஷீத் கான் என்று நான் நினைக்கிறேன். அவருக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன்.. டெஸ்ட் போட்டி போல் ஒருநாள்  போட்டிகளையும் அணுகு, டி20 வடிவத்தில் கூட உன்னால் விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடிகிறது எனும்போது, உன் மணிக்கட்டு பந்துகளை பேட்ஸ்மென்கள் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை எனும்போது தைரியமாக பீல்டர்களை நெருக்கமாக அமைத்து ‘அட்டாக் செய்’ மிட் ஆன், மிட் ஆஃப் மேல் முடிந்தால் அடி என்று சவால் விடு’ என்று கூறுவேன்.

 

ஆனால் டீப் மிட்விக்கெட் இன்றைய தின ஆட்டங்களில் தேவைப்படும் ரஷீத் கான் டீப் மிட்விக்கெட் வைத்துக் கொள்ள வேண்டும். பேட்ஸ்மெனுக்கு சவால் அளிக்க வேண்டும் இதனால் அவர் ஆப்கான் ரசிகர்களை ஏமாற்றப்போவதில்லை.

 

வார்னர் குறித்து..

 

டேவிட் வார்னரை ஐபிஎல் போட்டிகளில் பார்த்தேன். அங்கு அவர் பெரிய அளவுக்கு மட்டையினால் பதிலளித்தார். அவருக்கு ரன்கள் மீது கடும் தாகம் உள்ளது, உறுதியாகவும் உள்ளார். இங்கு வந்து வெயிலில் நன்றாக ஓடி நின்று பெரிய இன்னிங்சை ஆடுவது என்றால் அவரது உடல்நிலையை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே இவர் மீதும் ஒரு கண் தேவை  என்றார்.

 

அதே போல் ஜோப்ரா ஆர்ச்சர் நேற்று டெண்டுல்கர் கூறுவதற்கு முன்பாகவே திடீர் திருப்பத்தை விளைவிக்கும் எதிர்பாரா பவுலர் என்ற அடையாளத்தைப் பெற்றுவிட்டார், டெண்டுல்கரும் இதையே மீண்டும் கூறி டைட்டாக வீச வேண்டுமென்றாலும், விக்கெட்டுகள் வேண்டுமென்றாலும் இங்கிலாந்துக்கு ஜோஃப்ரா ஆர்ச்சர் இருக்கிறார் என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close