[X] Close

கிமார் ரோச் இல்லை: பாகிஸ்தானை முதலில் பேட் செய்ய அழைத்தது மே.இ.தீவுகள்


  • kamadenu
  • Posted: 31 May, 2019 15:04 pm
  • அ+ அ-

-Muthukumar R_50162

நாட்டிங்கம் மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பை 2019-ன் 2ம் ஆட்டத்தில் மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

 

வானிலை தொடக்கத்தில் ஸ்விங் பந்து வீச்சுக்குச் சாதகமாக இருப்பதால் முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்து சிலபல தொடக்க விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடிவெடுத்திருப்பதாக ஜேசன் ஹோல்டர் தெரிவித்தார்.

 

பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அமகதுவும் தான் டாஸ் வென்றிருந்தாலும் பவுலிங் செய்து சூழ்நிலையை சாதகமாக்கியிருப்பேன் என்றார்.

 

மே.இ.தீவுகள் அணியில் எவின் லூயிஸ், ஷனன் கேப்ரியல் இன்னும் முழு உடற்தகுதி பெறவில்லை ஆதலா ஆடவில்லை, ஆனால் கிமார் ரோச், பேபியன் ஆலன் ஆகியோர் அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

 

பாகிஸ்தான் அணி:

 

இமாம் உல் ஹக், பகார் ஜமான், பாபர் ஆஸம், ஹாரிஸ் சோஹைல், சர்பராஸ் அகமட், ஹபீஸ், இமாத் வாசிம், ஷதாப் கான், மொகமது ஆமிர், ஹசன் அலி, வஹாப் ரியாஸ்

 

மே.இ.தீவுகள் அணி:

 

கிறிஸ் கெய்ல், ஷெய் ஹோப் (விகீ), டேரன் பிராவோ, ஷிம்ரன் ஹெட்மையர், நிகோலஸ் பூரன், ரஸல், ஹோல்டர், கார்லோஸ் பிராத்வெய்ட், ஆஷ்லி நர்ஸ், ஷெல்டன் காட்ரெல், ஒஷேன் தாமஸ்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close