[X] Close

டீப் மிட்விக்கெட், ஒற்றைக் கையில் கேட்ச்': அலட்டிக்கொள்ளாமல் பேசிய பென் ஸ்டோக்ஸ்


  • kamadenu
  • Posted: 31 May, 2019 12:30 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் நான் பிடித்த கேட்ச் ஒன்றும் என்னுடைய சிறப்பான கேட்ச் என்று சொல்லிக்கொள்ள முடியாது என்று இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைப் போட்டித் திருவிழா தொடங்கி நடந்துவருகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று இங்கிலாந்து தென் ஆப்பிரி்க்க அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் சேர்த்தது. 312 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரி்க்க அணி 39.5 ஓவர்களில் 207 ரன்களுக்க ஆட்டமிழந்து 104 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் ஆட்டநாயகனாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார். பேட்டிங்கில் 89 ரன்களும் பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் சாயத்தார் ஸ்டோக்ஸ்

அதிலும் குறிப்பாக அதில் ரஷித் வீசிய 35 ஓவரில் பெலுக்வாயே அடித்த ஷாட்டில், டீப் மிட்விக்கெட்டில் நின்றிருந்த பென் ஸ்டோக்ஸ் பிடித்த கேட்ச் மிகச்சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்தரத்தில் சென்ற பந்தை ஒற்றைக் கையில் தாவிப்பிடித்தார்.

பென் ஸ்டோக்ஸ் ஒற்றை கையில் கேட்ச் 

இங்கிலாந்து முன்னாள் வீரர் பில் டப்னல், தனது வர்ணணையின் போது, பென் ஸ்டோக்ஸ் பிடித்த கேட்ச் நூற்றாண்டில் சிறந்தது என்று வர்ணித்தார்.

போட்டியின் வெற்றிக்குப்பின், பென் ஸ்டோக்ஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

என்னைப் பொருத்தவரை இந்த போட்டியில் நான் பிடித்த கேட்ச்தான் சிறந்த கேட்ச் என்று சொல்லவில்லை. இதைக் காட்டிலும் கடந்த 2015-ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் டிரன்ட் பிரிட்ஜ் நகரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடம் வோக்ஸ்க்கு எதிராக ஒருகேட்ச் பிடித்தேன். அது சிறந்தது. ஆனால், அந்த கேட்ச் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டுமே சிறந்தது.

eng.jpg 

இநத் போட்டியில் நான் பந்தை நான் தவறாகக் கணித்துவிட்டதால்தான் நான் பந்தை தாவிபிடிக்க வேண்டியதாகிற்று. நான் தவறான இடத்திலும் நின்று இருந்ததால், என்னால், பந்தை கணிக்க முடியவில்லை. சரியான இடத்தில் நின்றிருந்தால், அது வழக்கமான கேட்சாக இருந்திருக்கும்.

அதில் ரஷித் ஓவருக்கு அடுத்த ஓவரை நான் வீசிவிட்டு வந்தபோது கேப்டன் மோர்கன் என்னிடம் வந்து, என்னுடைய இதயத்துடிப்பு குறைந்துவிட்டதா, உன்னுடைய  கேட்ச என் இதயத்துடிப்பை அதிகரித்துவிட்டது என்றார்.

இந்த கேட்சை பிடித்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டு முயற்சித்தேன் அதுபோலவே நடந்தது. இதற்காக நான் சிரமப்படவில்லை. இவ்வாறு பென் ஸ்டோக்ஸ் தெரிவித்தார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close