[X] Close

அனுமதியின்றி பேரணி நடத்தியதாக 500 காங்கிரஸார் மீது வழக்குப் பதிவு


500

  • kamadenu
  • Posted: 31 May, 2019 07:59 am
  • அ+ அ-

காங்கிரஸ் தலைவர் பதவியில் ராகுல் காந்தி நீடிக்க வலியுறுத்தி சென்னையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட 500 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுகாங்கிரஸ் தோல்வியை தழுவியது.

இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியது. தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்திஅறிவித்தார். அவரது ராஜினாமாவை ஏற்க காங்கிரஸ் காரியகமிட்டி மறுத்துவிட்டது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, பொதுச் செயலாளர்பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் சமாதானம் செய்தும் அதை ராகுல் ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் பதவியில் ராகுல் காந்தி தொடர வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னையில் நேற்று முன்தினம் பேரணி நடத்தப்பட்டது. தேனாம்பேட்டை அண்ணா சாலையில் இருந்து காமராஜர் அரங்கத்துக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்களும், நிர்வாகிகளும் ஊர்வலமாக சென்றனர். அப்போது 2 பேர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், அனுமதியின்றி பேரணியாக சென்றதற்காக தமிழககாங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் மீது சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியர் உத்தரவுக்கு கீழ்படியாமை ஆகிய 2 பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது “கே.எஸ்.அழகிரி உட்பட சுமார் 500 பேர் மீது முதல்கட்டமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது” என்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close