[X] Close

2020-ம் ஆண்டு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் நடத்த அனுமதி வழங்கப்பட்டது


2020

  • kamadenu
  • Posted: 30 May, 2019 20:47 pm
  • அ+ அ-

-பிடிஐ

உலக டி20 ஆஸ்திரேலியாவில் நடப்பதற்கு முன்பாக செப்டம்பர் 2020-ல் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்த பாகிஸ்தானுக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

 

ஆனால் தொடரை பாகிஸ்தானில் நடத்தினால் இந்திய அணி பங்கேற்பது கடினமாகும் என்பதால் நடுநிலை மைதானங்களில் அதாவது யு.எ.இ., ஷார்ஜாவில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

செவ்வாயன்று நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுவும் டி20 வடிவத்தில்தான் நடைபெறுகிறது. 2009-ல் இலங்கை அணி சென்ற பேருந்து மீது பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற பிறகே பாகிஸ்தானில் தொடர்கள் நடத்தப்படுவதில்லை. ஆகவே இந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட்டும் துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் நடைபெறும் என்று தெரிகிறது.

 

ஆனாலும் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் பற்றிய விவரங்கள் பிற்பாடு முடிவெடுக்கப்படும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில், “பாகிஸ்தானில் போய் ஆடுவது என்பது முற்றிலும் அரசு சம்பந்தப்பட்டது. மத்திய அரசு என்ன முடிவெடுக்கிறதோ அதற்கு வாரியம் கட்டுப்படும். நாங்கள் கடந்த முறை யு.ஏ.இ.யில் ஆசியக் கோப்பையை நடத்தியது போல் பாகிஸ்தானும் நடுநிலை மைதானங்களில் ஏற்பாடு செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

 

ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சார்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகள், இலங்கை அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப வலியுறுத்த வேண்டும் என்று கோரினர். அதாவது செப்டம்பரில் லாகூர், கராச்சியில் இந்த டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close