[X] Close

தென் ஆப்பிரிக்காவுக்குப் பின்னடைவு: ஆர்ச்சர் பவுன்சரில் காயம்பட்டு வெளியேறினார் ஆம்லா


  • kamadenu
  • Posted: 30 May, 2019 19:54 pm
  • அ+ அ-

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முதல் போட்டியில் 312 ரன்கள் இலக்கை விரட்டி வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

 

இலக்கை விரட்ட தொடக்க வீரர்களாக குவிண்டன் டி காக், மூத்த, அனுபவ வீரர் ஹஷிம் ஆம்லாவும் இறங்கினர். ஆம்லா 1 பவுண்டரியுடன் 8 பந்துகளில் 5 ரன்கள் எடுத்திருந்தார்.

 

அப்போது 4வது ஓவரை ஜோஃப்ரா ஆர்ச்சர் வீச வந்தார், இதே ஆர்ச்சரின் இந்த ஓவரின் 3வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் ஆம்லா.  3வது பந்தும் 4வது  பந்தும் கொஞ்சம் வேகம் குறைவான பந்துகளாக அமைந்தன.

 

ஆனால் 5வது பந்து ஷார்ட் பிட்ச் பந்தாகி திடீரென எழும்ப சுமார் 145 கிமீ வேகப்பந்தை புல் ஷாட் ஆட முயன்றார் ஆம்லா ஆனால் பந்து அவரைத் தாக்கியது. மைதானத்திற்கு உடற்கூறு மருத்துவர் வந்தார்.  நெற்றியத் தடவிய படியே அவர் பெவிலியன் நோக்கி நடந்தார்.

 

என்ன நடந்தது, பின்னால் இறங்குவாரா, மருத்துவ செக்-அப் செய்து கொள்ள செல்கிறாரா என்ற விவரங்கள் இனிதான் வரும்.

 

மார்க்ரம் இறங்கியுள்ளார், டி காக் 20 ரன்களையும் அய்டன் மார்க்ரம் 11 ரன்களையும் எடுத்து ஆடிவர தென் ஆப்பிரிக்கா விக்கெட் இழப்பின்றி 8வது ஓவரில் 36 ரன்கள் எடுத்துள்ளது.  இப்போதே தேவைப்படும் ரன் விகிதம் ஓவருக்கு 6.50 ஆக உள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close