[X] Close

தொடர்ச்சியாக 4வது அரைசதம் காணும் ஜேசன் ராய்; ஜோ ரூட்டும் அரைசதம்: 3 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து பின்னடைவு


4-3

  • kamadenu
  • Posted: 30 May, 2019 16:33 pm
  • அ+ அ-

-Muthukumar R_50162

உலகக்கோப்பை 2019-ன் முதல் போட்டியிலேயே இங்கிலாந்தின் ஜேசன் ராய், ஜோ ரூட் ஆகியோர் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தனர். இதில் ஜேசன் ராய் தனது 4வது அரைசதத்தை தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் அடித்துள்ளார்.

 

முதல் ஓவரில் இம்ரான் தாஹிரிடம் ஜானி பேர்ஸ்டோ டக் அவுட் ஆக, அதிர்ச்சியிலிருந்து மீண்ட இங்கிலாந்து ஜேசன் ராய், ஜோ ரூட்டின் பிரமாதமான ஆட்டத்தின் மூலம் 18.4 ஓவர்களில் 107/2 என்று ஆடிவருகிறது.

 

ஆட்டத்தின் 19வது ஓவரில் பெலுக்வயோ வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆட முயன்று டாப் எட்ஜ் ஆக மிட் ஆஃபில் கேப்டன் டுபிளெசிஸ் கேட்ச் எடுக்க ஜேசன் ராய் 53 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் ஜேசன் ராய் 4வது அரைசதம் எடுத்தார்.

 

ஜோ ரூட் இன்னொரு முனையில் ஸ்டெடியாக 59 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 51 எடுத்து சற்று முன் ரபாடாவிடம் ஆட்டமிழந்து பெவிலியன் சென்றார்.

 

புதிதகாக இறங்கியுள்ள கேப்டன் இயான் மோர்கன் கவர் ட்ரைவ் பவுண்டரி மூலம் 4 ரன்களுடன் ஆடி வருகிறார், இங்கிலாந்து  19.1 ஓவர்களில் 111/3 என்று 5.84 என்ற ரன் விகிதத்தில் சென்று கொண்டிருக்கிறது. பென் ஸ்டோக்ஸ் இறங்கியுள்ளார்.

 

தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சில் பிரிடோரியஸ் நீங்கலாக அனைவரும் 5 ரன்களுக்கு மேல் ரன் கொடுத்து வருகின்றனர். இம்ரான் தாஹிர், லுங்கி இங்கிடி, ரபாடா ஆகிய மூவரும் ஓவருக்கு 6 ரன்கள் அல்லது அதற்கு மேல் கொடுத்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close