[X] Close

விராட் கோலி சாதனையை விரட்டும் ஹசிம் அம்லா: இன்றைய  போட்டியில் முறியடிப்பாரா?


  • kamadenu
  • Posted: 30 May, 2019 15:19 pm
  • அ+ அ-

-ஏ.என்.ஐ.

லண்டனில் இன்று தொடங்கிய உலகக் கோப்பைப் போட்டி திருவிழாவில் விராட் கோலியின் சாதனையை தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

12-வது உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கியது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் முதலாவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து களமிறங்குகிறது இங்கிலாந்து அணி.

இந்த போட்டியில் விராட் கோலியின் சாதனையை தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா முறியடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிவேகமாக 8 ஆயிரம் ரன்களை எட்டிய வீரரில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். அதாவது விராட் கோலி தனது 8 ஆயிரம் ரன்களை 175  இன்னிங்ஸ்களில் எடுத்துள்ளார்.

mala.jpg 

ஆனால், தற்போது ஹசிம் அம்லா 171 இன்னிங்ஸ்கலில் 7910 ரன்களுடன் உள்ளார். இன்னும் 8 ஆயிரம் ரன்களை ஹசிம் அம்லா எட்டுவதற்கு 90 ரன்கள் தேவைப்படுகிறது. இந்த போட்டியில் 90 ரன்களை அம்லா எடுத்துவி்ட்டாலோ அல்ல இன்னும் இரு போட்டிகளுக்குள் எடுத்துவிட்டாலோ குறைந்த இன்னிங்ஸ்களில் 8 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் எனும் சாதனையைச் செய்து கோலியினஅ சாதனையை முறியடிப்பார்.

ஹசிம் அம்லா, தனது 2ஆயிரம், 3 ஆயிரம், 4 ஆயிரம், 5 ஆயிரம், 6 ஆயிரம் , 7 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்து வந்த வீரர் எனும் பெருமையை தக்கவைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அம்லா 8 ஆயிரம் ரன்களை எட்டினால், தென் ஆப்பிரிக்கத் தரப்பில் 8 ஆயிரம் ரன்களை எட்டிய 4-வது வீரர் எனும் பெருமையைப் பெறுவார். இதற்கு முன், ஜேக்ஸ் காலிஸ், டிவில்லியர்ஸ், கிப்ஸ் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்துக்கு அணிக்கு எதிராக 1000 ரன்களை எட்ட இன்னும் அம்லாவுக்கு 37 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. அவ்வாறு 37 ரன்களை எட்டிவிட்டால், இங்கிலாந்துக்கு அணிக்கு எதிராக ஆயிரம் ரன்களை காலிஸ்க்கு அடுத்தார்போல் 2-வது வீரர் எனும் பெருமையைப் பெறுவார்.

ஜேக்ஸ் காலிஸ் ஒருநாள் போட்டியில் 11, 550 ரன்களும், டிவில்லியர்ஸ் 9427 ரன்களும், கிப்ஸ் 8094 ரன்களும் சேர்த்துள்ளார்கள்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close