[X] Close

உலகக்கோப்பை திருவிழா: லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் விராட் கோலிக்கு மெழுகு சிலை


  • kamadenu
  • Posted: 30 May, 2019 14:14 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குவதையொட்டி, லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை கவுரவிக்கும் பொருட்டு அவரின் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையை மேடம் டுசாஸ்ட் நிறுவனம் அமைத்துள்ளது. இன்று முதல் ஜூலை 16-ம் தேதிவரை விராட் கோலியின் சிலை அருங்காட்சியகத்தில் ரசிகர்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

Virat-1.jpg 

லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தின் மேலாளர் ஸ்டீவ் டேவிஸ் கூறுகையில், " கிரிக்கெட் காய்ச்சல், அடுத்தசில நாட்களில் எங்கள் நாட்டை பற்றிக்கொள்ளப் போகிறது. அதற்கு முன்னதாக, புதிய சிலையான, உலகப்புகழ்பெற்ற வீரர் விராட் கோலியின் சிலையை இன்று பார்வைக்கு வைத்துவிட்டோம். கிரிக்கெட் மைதானத்தில் மட்டும் தங்கள் ஹீரோவான கோலி ரசிகர்கள் பார்ப்பதோடு, எங்கள் அருங்காட்சியகத்தில் அருகே நின்று பார்க்க முடியும் " எனத் தெரிவித்தார்.

Virat-750x430.jpg 

விராட் கோலியைப் போன்று தத்தூரூபமாக சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலைக்கு தேவையான இந்திய அணியின் உடைகள், பேட், காலணி, அனைத்தையும் விராட் கோலி வழங்கியுள்ளார். ஏற்கெனவே சச்சின் டெண்டுல்கர், தடகள வீரர் உசேன் போல்ட், சர் மோ பாரா ஆகியோரின் சிலை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close