[X] Close

ஆஸி. கேப்டனை 'ஸ்லெட்ஜிங்' செய்த இளவரசர் ஹேரி: ராணி எலிசபெத்துடன் 10 விராட் கோலி சந்திப்பு


10

  • kamadenu
  • Posted: 30 May, 2019 13:33 pm
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக லண்டனில் அரச குடும்பத்தை சந்திக்க 10 அணிகளின் கேப்டன் சென்றபோது, ஆஸி.கேப்டன் ஆரோன் பிஞ்சை, இளவரசர் ஹேரி ஸ்லெட்ஜிங் செய்துள்ளார்.

இங்கிலாந்தில் 12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்த போட்டித் தொடருக்கு முன்பாக, உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்கள் நேற்று லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணி எலிசபெத்தைச் சந்தித்துப் பேசினார்கள். இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, ஆஸி. கேப்டன் ஆரோன் பிஞ்ச், மே.இ.தீவுகள் கேப்டன் ஹோல்டர், இங்கிலாந்து கேப்டன் மோர்கன், பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது, இலங்கை கேப்டன் திரிமானே, வங்கதேச கேப்டன் மோர்தசா, ஆப்கானிஸ்தான் கேப்டன் குல்பதின் நயிப், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்ஸன், தென் ஆப்பிரிக்க கேப்டன் டூப்பிளசிஸ்

அப்போது, ஒவ்வொரு அணியின் கேப்டன்களும் ராணி எலிசபெத்துக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. அப்போது, சசெக்ஸ் இளவரசர் ஹேரியும் உடன் இருந்தார். ஒவ்வொரு அணியின் கேப்டன்களுடன் ராணி எலிசபெத் சில நிமிடங்கள் பேசினார்.

இங்கிலாந்து அணிக்கும், ஆஸ்திரேலிய அணிக்கும் கிரிக்கெட்டில் எப்போதும் போட்டியான சூழல் காணப்படும். அதிலும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் நீயா, நானா என்ற அளவுக்கு கடுமையாக மோதிக்கொள்வார்கள்.

இதனால் இரு நாட்டு ரசிகர்களுக்கும் இடையே எப்போதும் மறைமுகமான பகை இருந்துகொண்டே இருக்கும். போட்டிகளின் போது வீர்ரகளிடையே ஸ்லெட்ஜிங் இல்லாத போட்டியே இருக்காது என்ற அளவுக்கு இருக்கும்.

ஆனால் வீரர்களிடையே மட்டும்தான் ஸ்லெட்ஜிங் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது இளவரசர் ஹாரேயே, ஆஸி.கேப்டனை ஸ்லெட்ஜிங் செய்துள்ளார்

kohli.jpg 

அரண்மனையில் ராணி எலிசபெத்தை சந்தித்துவிட்டு அனைத்து அணியின் கேப்டன்களும் புறப்பட்டனர். அப்போது இளவரசர் ஹேரி, ஆஸி. கேப்டன் ஆரோன் பிஞ்சிடம் பேசினார். " இன்னமும் நீங்கள் அணியில்தான் இருக்கிறீர்களா, இல்லையா, எத்தனை ஆண்டுகளாக ஆஸி. அணியில் விளையாடுகிறீர்கள்" எனக் கேட்டுள்ளார்.

அப்போது இந்த கேள்வியைக் கேட்டு சிரித்த ஆரோன் பிஞ்ச், " நான் தொடர்ந்து 8 ஆண்டுகளாக ஆஸி. அணியில் விளையாடுகிறேன்" என்றார்.

அப்போது இளவரசர் ஹேரியிடம் உலகக் கோப்பையை வெல்வதற்கு எந்த அணிக்கு சாத்தியம் இருக்கிறது என்று நிருபர்கள் கேட்டபோது அவர் " இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு மட்டுமே வாய்ப்பு இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close