[X] Close

60 நொடிகள் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி: கடைசி இடத்தில் இந்தியா : லண்டனில் தொடங்கியது கிரிக்கெட் கொண்டாட்டம்


60

  • kamadenu
  • Posted: 30 May, 2019 12:04 pm
  • அ+ அ-

-ஏ.என்.ஐ.

லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனை முன் நேற்று ஐசிசி உலகக்கோப்பை திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட 60 வினாடிகள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வென்றது.

12-வது ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா நேற்று அதிகாரபூர்மாக லண்டனில் தொடங்கியது. லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனை முன் இருக்கும் வர்த்தக மையம்முன் இந்த திருவிழா தொடங்கியது.

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்ஆன்ட்ரூ பிளின்ட்டாப், வர்ணணையாளர்கள் சிபானி தண்டேக்கர், பேடி மெக்கின்னஸ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். இங்கிலாந்து பாப்இசை பாடகர் ஜான் நியூமேன் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

paksi.jpg 

நிகழ்ச்சியில் ஏராளமான முன்னாள் வீரர்கல் பேசியபின் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் 60 வினாடிகள் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகள் சார்பில் இரு பிரபலங்கள் பங்கேற்று ஒரு நிமிடத்தில் எத்தனை ரன்கள் சேர்க்கிறார்கள் என்பதுதான் போட்டியாகும்.

ஷாப்பிங் மால் முன் நடத்தப்பட்ட இந்த காட்சி கிரிக்கெட் போட்டி ரசிகர்களை வெகுவாக உற்சாகப்படுத்தியது. ரப்பர் பந்துகளால் நடத்தப்பட்ட இந்த போட்டிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டேவிட் பூன் நடுவராக செயல்பட்டார்.

60 வினாடிகள் கிரிக்கெட்  

இந்திய சார்பில் அனில்கும்ப்ளே,  பாலிவுடன் நடிகர் பர்ஹான் அக்தர் பங்கேற்றனர். விவியன் ரிச்சார்ட்ஸ், பிரட்லீ, ஜேக்ஸ் காலிஸ், பீட்டர்ஸன், ஜெயவர்த்தனா, அப்துல் ரசாக், நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்பாயி, கால்பந்து வீரர் ஸ்டீவன் பியானிர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஒரு அணிக்கு இரு பேட்ஸ்மேன்கள் களமிறங்குவர், ஒருநிமிடத்தில் ஏராளமான பந்துகள் வீசப்படும் இரு பேட்ஸ்மேன்களும் மாறி, மாறி களமிறங்கி அடித்து நொறுக்குவார்கள். இதற்கு ரன்களும் வழங்கப்படும்.

yusag.jpg 

பீட்டர்சன் தலைமையில் இங்கிலாந்து அணி 74 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. பிரட் லீ தலைமையில் ஆஸ்திரேலிய அணி 69 ரன்கள் சேர்த்து 2-ம் இடம் பிடித்தது. ஆப்கானிஸ்தான் 52 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும், காலிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா 4-வது இடத்தில்48 ரன்கள் சேர்த்தது.

விவியன் ரிச்சர்ட்ஸ், ஒலிம்பிக் வீரர் யோகன் பிளேக் ஆகியோர் சேர்ந்து 47 ரன்கள் சேர்த்தனர். ஜெயவர்த்தனா தலைமையில் இலங்கை அணி 43 ரன்களும், மலாலா யூசுபாயி தலைமையில் பாகிஸ்தான் அணி 38 ரன்கள் சேர்த்து.

நியூசிலாந்து 32 ரன்களும், வங்கதேசம் 22 ரன்களும், கும்ப்ளே, அக்தர் தலைமையிலான இந்திய அணி 19 ரன்கள் சேர்த்து கடைசி இடம் பிடித்தது.

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close