[X] Close

சச்சினின் 2-வது இன்னிங்ஸ் இன்று  ஆரம்பம்: உலகக் கோப்பைப் போட்டியில் ரசிகர்கள் எதிர்பார்ப்பு


2

  • kamadenu
  • Posted: 30 May, 2019 10:52 am
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் ஐசிசி உலகக் கோப்பைப்போட்டியில் தனது 2-வது இன்னிங்ஸை தொடங்குகிறார்.

லண்டனில் இன்று தொடங்கும் ஐசிசி உலகக்கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா இடையிலான போட்டியில் சச்சின் அதிகாரபூர்வ வர்னணையாளராக களமிறங்குகிறார்.

இதற்கு முன் சச்சின் பல்வேறு போட்டிகளில் பேசி இருந்தாலும் தொழில்முறை வர்னணையாளராக, ஐசிசியில் இதுவரை இருந்தது இல்லை. முதல்முறையாக இப்போதுதான் பங்கேற்கிறார்.

லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று இந்தியநேரப்படி பிற்பகலில் தொடங்கும் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஆட்டத்தில் இந்தி, ஆங்கிலத்தில் வர்னணை செய்யப்படுகிறது. இதில் நேரலையில் பிலிப் ஹியூவுடன், சச்சின் டெண்டுல்கர் இணைய உள்ளார்.

sahin.PNG 

இதுதொடர்பாக ஸ்டார் ஸ்ரோப்ர்ட்ஸ் சேனலும் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் சச்சின் உலகக் கோப்பைப் போட்டியில் வர்னணையாளராக களமிறங்குகிறார் என்று தெரிவித்துள்ளது.

சச்சின் டெண்டுல்கர் இதுவரை ஐசிசியின் 6 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்று 2,278 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 2003-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் 11 ஆட்டங்களில் சச்சின் 673 ரன்கள் சேர்த்துள்ள்ளார். சச்சினுடன் விளையாடிய  பல சர்வதேச வீரர்கள் வர்னணையாளர்  பணிக்கு திரும்பிவிட்ட நிலையில், சச்சின் இப்போது அந்த துறைக்குச் செல்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close