[X] Close

இந்திய அணியின் சாதக பாதகங்கள்


  • kamadenu
  • Posted: 30 May, 2019 09:14 am
  • அ+ அ-

1975-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அறிமுகமானது. இதன் பின்னர் 1983-ம் ஆண்டு தொடரின் இறுதிப் போட்டியில் கபில் தேவ் தலைமையில், இருமுறை சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் பின்னர் 28 வருடங்களுக்குப் பிறகு 2011-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் தோனி தலைமையில் மீண்டும் மகுடம் சூடியது இந்திய அணி. முன்னதாக 2003-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் கங்குலி தலைமையிலான இந்திய அணி,  ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்திருந்தது. இதை தவிர்த்து 1987, 1996, 2015-ம் ஆண்டு தொடர்களில் இந்திய அணி அரை இறுதி வரை முன்னேறியிருந்தது.

பலம்

டாப் ஆர்டர் பேட்டிங், வலுவான பந்து வீச்சு, தோனியின் அனுபவம், ஆலோசனை. ஷிகர் தவண், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் கடந்த 4 வருடங்களில் இந்திய அணியின் வெற்றிகளில் பிரதான பங்கு வகித்துள்ளனர்.

ஜஸ்பிரித் பும்ரா, மொகமது ஷமி, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் ஆகியோரை உள்ளடக்கிய பந்து வீச்சு துறை தட்டையான ஆடுகளங்களில் கூட எந்த ஒரு எதிரணியையும் சிதைவுக்கு உள்ளாக்கும் திறன் கொண்டது.

பலவீனம்

பேட்டிங்கில் டாப் ஆர்டர் வீரர்களான ரோஹித் சர்மா, தவண், கோலி ஆகியோரை பெரிதும் சார்ந்திருப்பது. இவர்கள் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்த தவறும்போது நடு வரிசை பேட்டிங் கடும் அழுத்தத்தை சந்திக்க நேரிடுவது.

நடுவரிசைக்கும், பின்கள வரிசைக்கும் பாலமாக இருக்கக்கூடிய 4-வது வரிசை வீரர், ஸ்திரத்தன்மையுடன் இல்லை. காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேதார் ஜாதவ் பார்மின்றி தவிப்பது.

அச்சுறுத்தல்கள்

அணியின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று சமீபகால மோசமான பார்மில் இருந்து மீண்டு வருவது. சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரை ஆஸ்திரேலிய அணியிடம் விராட் கோலி குழுவினர் இழந்திருந்தனர். கடைசியாக பங்கேற்ற 10 ஆட்டங்களில் இந்திய அணி 3-ல் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.

இழந்த பார்மை விராட் கோலி குழுவினர் விரைவில் மீட்டெடுக்க வேண்டும். மேலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு துறையில் இடதுகை வீரர் இல்லை. பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோர் வலது  கை பந்து வீச்சாளர்கள். இடதுகை பந்து வீச்சாளர் அணியில் இருந்திருந்தால் தட்டையான இங்கிலாந்து ஆடுகளங்களில் கூடுதல் பலம் கிடைக்கும்.

ஆட்டத்தின் சூழ்நிலைக்கு தகுந்தபடி நெகிழ்வுத் தன்மையுடன் எந்த இடத்திலும் களமிறங்கி விளையாடும் தன்மை கொண்ட வீரர்கள் உள்ளனர். நம்பகத்தன்மையான ஆல்ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா இருப்பது பெரிய பலம்.

 ஜடேஜா, பாண்டியா 10 ஓவர்களை முழுமையாக வீசும் திறனுடன், பெரிய அளவிலான ஷாட்கள் மேற்கொள்ளக்கூடியவர்கள். கே.எல்.ராகுல், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் ஆகியோர் அணியின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய தேர்வுகளாக உள்ளனர்.

தரவரிசை 2

உலகக் கோப்பையில்...

ஆட்டம் 75

வெற்றி 46

தோல்வி 27

டை/முடிவு இல்லாதது 2

வெற்றி சதவீதம் 62.83%

கேப்டன்: விராட் கோலி

பயிற்சியாளர்: ரவி சாஸ்திரி

அணி விவரம்

விராட் கோலி (கேப்டன்)

ஷிகர் தவண்

ரோஹித் சர்மா

கே.எல்.ராகுல்

தோனி

கேதார் ஜாதவ்

தினேஷ் கார்த்திக்

ஹர்திக் பாண்டியா

விஜய் சங்கர்

ரவீந்திர ஜடேஜா

குல்தீப் யாதவ்

யுவேந்திர சாஹல்

மொகமது ஷமி

ஜஸ்பிரித் பும்ரா

புவனேஷ்வர் குமார்

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close